மதுபோதையில் கிரானைட் கம்பெனியில் வடமாநில தொழிலாளி கொலை
மதுபோதையில் கிரானைட் கம்பெனியில் வடமாநில தொழிலாளி கொலை
மாதிரிப்படம்
மாரவாடி பகுதியில் உள்ள கிரானைட் தொழிற்சாலையில் பாபாய் மற்றும் ஆதித்ய சவுந்தர்யா ஆகியோ பணியாற்றி வந்தனர். மேற்குவங்கத்தைச் சேர்ந்த இவர்கள் இருவருக்கும் மது அருந்தும் போது அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
தருமபுரி அருகே கிரானைட் கம்பெனியில், தங்குமிடத்தில் ஏற்பட்ட தகராறில், வட நாட்டு தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
மாரவாடி பகுதியில் உள்ள கிரானைட் தொழிற்சாலையில் பாபாய் மற்றும் ஆதித்ய சவுந்தர்யா ஆகியோர் பணியாற்றி வந்தனர். மேற்குவங்கத்தைச் சேர்ந்த இவர்கள் இருவருக்கும் மது அருந்தும் போது அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
தொழிற்சாலை நிர்வாகத்திற்கு தெரியாமல் மீண்டும் அங்குள்ள தங்கும் விடுதிக்கு வந்த இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பாபாயை சம்மட்டியால் அடித்துக் கொலை செய்த ஆதித்ய சவுந்தர்யா தலைமறைவாகியுள்ளார்.
இதுதொடர்பாக மதிகோனாபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளியை பிடிக்க தனிப்படை அமைத்தனர். இந்த தனிப்படை குற்றவாளியைத் தேடி பெங்களூரு விரைந்துள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.