ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தொடங்கியது வடகிழக்கு பருவமழை..15 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை..!

தொடங்கியது வடகிழக்கு பருவமழை..15 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை..!

மழை

மழை

Weather update | வடகிழக்கு பருவமழை  தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நேற்று தொடங்கியது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வடகிழக்கு பருவமழை  தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நேற்று தொடங்கியது. அத்துடன், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில்  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது,

    குறிப்பாக இன்று, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை,  சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 15 மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் கணித்துள்ளது.

    சென்னையில் அடுத்த 24 மணிநேரத்துக்கு வானம்  மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,  நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், சென்னையில் மண்டல வாரியாக மழைப்பொழிவு குறித்து, முன்கூட்டியே தகவல் தெரிவிக்க உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக, வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் நான்கு ரேடார்கள் மூலம் மழைப்பொழிவை முன்கூட்டியே கணிக்கும் வசதி உள்ளதாகவும் கூறினார்.

    Published by:Anupriyam K
    First published:

    Tags: Heavy rain, MET, MET warning, Meteorology department, North East Monsoon, North east monsoon rain