அரபிக்கடலில் லூபன் புயல்: வடகிழக்கு பருவமழைக்கு சாதகமான சூழல்!

அரபிக்கடலில் லூபன் புயல்: வடகிழக்கு பருவமழைக்கு சாதகமான சூழல்!
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: October 8, 2018, 9:58 PM IST
  • Share this:
அரபிக்கடலில் உருவாகியுள்ள லூபன் புயலாலும், வங்கக் கடலில் உருவாக உள்ள புயலாலும் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் மாறிவிட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், அரபிக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளதாக தெரிவித்தார். லூபன் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் மேலும் வலுப்பெற்று தெற்கு ஓமன் கரையை நோக்கி நகரும் எனக் கூறிய அவர், புதிதாக வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக மாறி மத்திய வங்கக்கடலில் நிலவுவதாக குறிப்பிட்டார். இந்த தாழ்வு மண்டலம் அடுத்த இரண்டு நாட்களில் புயலாக வலுப்பெற்று ஒடிசா கரையை நோக்கி நகரும் என்றும் இதனால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல் மாறியுள்ளதாகவும் பாலச்சந்திரன் கூறினார்.

அடுத்த 24 மணிநேரத்தில் வடதமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.


இதனிடையே, தமிழகத்தில் 29 மாவட்டங்களில் இயல்பை காட்டிலும் கூடுதல் மழை பெய்துள்ளதாகவும், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் அறிவுறுத்தினார்.

கடலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் நிரந்தர வெள்ளத் தடுப்பு பணிகளை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி பார்வையிட்டு ஆய்வு செய்தார். 140 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வரும் வெள்ள தடுப்பு நடவடிக்கையால் வரும் காலங்களில் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் வராமல் தடுக்கப்படும் என்று கண்காணிப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்
First published: October 8, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading