முகப்பு /செய்தி /தமிழ்நாடு / புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம்.. சென்னை வந்தது பீகார் அரசின் சிறப்பு குழு!

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம்.. சென்னை வந்தது பீகார் அரசின் சிறப்பு குழு!

சென்னையில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ள பீகார் குழு

சென்னையில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ள பீகார் குழு

Bihar Team Visit Tamilnadu | தமிழ்நாட்டில் பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுதாக எழுந்த வதந்தியின் அடிப்படையில் பீகார் மாநில சிறப்பு குழு சென்னை வந்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வந்துள்ள வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்திகள் பரவின. மேலும், வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்த விவகாரம் பீகார் மாநில சட்டப்பேரவையில் நேற்று எதிரொலித்தது. அதைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று இந்தப் பிரச்னையை நேரில் ஆராய தமிழ்நாட்டிற்கு அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவை அனுப்பி வைப்பதாக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக எழுந்துள்ள புகார் குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக பீகார் மாநில கிராம வளர்ச்சி துறை செயலாளர் பாலமுருகன் தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவை அமைத்து பீகார் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த குழுவில் நுண்ணறிவு பிரிவு ஐஜி கண்ணன், தொழிலாளர் நலத்துறை சிறப்பு செயலாளர் ஸ்ரீஅலோக் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் இடம்பெற்றிருந்தனர்.

இதில், பாலமுருகனும், கண்ணனும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த குழுவினர் தமிழ்நாடு தலைமை செயலாளர் மற்றும் டிஜிபியுடன் ஆலோசனை நடத்த உள்ளனர். மேலும், பீகார் மாநில தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் மக்களிடம் பேசுவதுடன், பீகார் தொழிலாளர்களின் பிரச்னைகளுக்கு உள்ளூர் அதிகாரிகளுடன் பேசி தீர்வு காண்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரவிய வதந்தியை தொடர்ந்து குழுவை பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் அனுப்பியுள்ளார். அதன்படி பீகார் அரசின் குழு இன்று மாலை சென்னைக்கு வந்தது. தொடர்ந்து பீகார் அரசின் குழுவினர் சென்னையில் தொழிலாளர் நலத்துறை ஆணையரை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோன்று பீகார் மாநில அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவும் தமிழ்நாட்டிற்கு வருகை தர உள்ளது. முன்னதாக பீகார் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக பீகார் எதிர்கட்சிகள் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Bihar, Migrant Workers, Tamilnadu