முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மத்திய அரசின் துறைகளில் திட்டமிட்டே வட மாநிலத்தவர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள் - வேல்முருகன் குற்றச்சாட்டு

மத்திய அரசின் துறைகளில் திட்டமிட்டே வட மாநிலத்தவர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள் - வேல்முருகன் குற்றச்சாட்டு

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன்.

மத்திய அரசின் துறைகளில் திட்டமிட்டே வட மாநிலத்தவர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

  • Last Updated :

ரயில்வே, வருமான வரித்துறை போன்ற மத்திய அரசின் துறைகளில் திட்டமிட்டே வட மாநிலத்தவர்கள் பணியில் அமர்த்தப்படுவதாக குற்றம்சாட்டியுள்ள வேல்முருகன், தமிழக அரசு பணிகளில் 100 சதவிகிதம் தமிழர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

top videos

    மேலும், மத்திய மற்றும் தனியார் துறைகளில் 90 சதவிகித தமிழர்களுக்கு வாய்ப்பு வழங்கக் கோரி சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், மத்திய அரசின் பணிகளில் அந்தந்த மாநில மக்களுக்கு 90 சதவிகித வாய்ப்புகளை வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

    First published:

    Tags: Velmurugan