கொரோனா ஊரடங்கு அச்சம்: திருச்சியிலிருந்து சொந்த மாநிலங்களுக்குப் புறப்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள்

கொரோனா ஊரடங்கு அச்சம்: திருச்சியிலிருந்து சொந்த மாநிலங்களுக்குப் புறப்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள்

கொரோனா ஊரடங்கு அச்சம்: திருச்சியிலிருந்து சொந்த மாநிலங்களுக்குப் புறப்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள்

கொரோனா ஊரடங்கு அச்சத்தின் காரணமாக திருச்சியிலிருந்து ஏராளமான வடமாநிலத் தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.

 • Share this:
  இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது வரை தொடர்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக குறைந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்திய அளவில் நாள் ஒன்றுக்கு 60,000-க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. இதுவரையில் 1.21 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலும் நாள் ஒன்றுக்கு 2,300 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தற்போது மீண்டும் தீவிரமாக்கப்பட்டு வருகின்றன.

  மீண்டும் முழு ஊரடங்கு கொண்டுவரப்படும் என்று பொதுமக்களிடையே அச்சம் நிலவுகிறது. பொதுமக்கள் பலரும், தேர்தலுக்குப் பிறகு ஊரடங்கு கொண்டு வரப்படும் என்று அச்சத்துடனே இருந்து வருகின்றனர். கடந்த ஆண்டு மார்ச் 25-ம் தேதி திடீரென ஊரடங்கு விதிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடுமையான அவதிக்குள்ளாகினர். குறிப்பாக, புலம்பெயர் தொழிலாளர்கள் கடுமையான துயரங்களுக்கு உள்ளாகினர். நாடு முழுவதிலிலுமிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் குழந்தைகளுடன் தங்களது உடமைகளை எடுத்துக்கொண்டு நூற்றுக்கணக்கான கி.மீட்டர் தூரங்களுக்கு நடந்துச் செல்லவேண்டிய அவலநிலையும் ஏற்பட்டது.  மேலும் படிக்க...  நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடக்கம்

  இந்தநிலையில், மீண்டும் ஊரடங்கு அச்சம் மக்களிடையே எழுந்துள்ளதால் புலம்பெயர் தொழிலாளர்கள் பெரிதும் அச்சத்துக்கு உள்ளாகியுள்ளனர். அதனால், திருச்சியில் வேலை பார்த்துவந்த வடமாநிலத் தொழிலாளர்கள் பலரும் நேற்று அவர்களின் சொந்த ஊருக்குத் திரும்பினர். அவர்களது வீட்டு உபயோகப் பொருள்களான சிலிண்டர் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொண்டு புறப்பட்டனர். அதனால், திருச்சி ரயில்நிலையத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று, திருச்சியிலிருந்து சென்ற ஹவுரா விரைவு ரயிலில் தொழிலாளர்கள் பலரும் சென்றனர்.

  செய்தியாளர்: கதிரவன்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: