வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்ட திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அண்ணாமலையை போன்றவர்கள் எத்தனை வேடம் போட்டு வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள் என விமர்சனம் செய்தார்.
இதுதொடர்பாக பதில் அறிக்கை வெளியிட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “நான் இரட்டை வேடம் போடுவதாக ஆர்.எஸ்.பாரதி ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். ஆனால் இரட்டை வேடங்கள் போடுவது என்பது திமுகவினருக்கு இயல்பானது. பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தமிழகம் அமைதிப் பூங்கா என்று, தொட்டிலையும் ஆட்டி வைக்கும் இரட்டை வேடம் திமுகவிற்கு கைவந்த கலை” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க; திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை கொலை.. நண்பர் வெறிச்செயல் - விசாரணையில் அதிர்ச்சி தகவல்
இந்தி தெரியாது போடா என்று முதல்வரின் மகன் டி-ஷர்ட் கலாச்சாரத்தை, அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தொடங்கி வைக்க... விமான நிலையத்தில் என்னிடம் இந்தியில் பேசினார்கள் என்று முதல்வரின் தங்கை, திமுகவின் எம்பி ஒரு பொய்யான புகாரை வழங்கி... வடமாநிலத்தவருக்கு எதிரான வன்மத்தைத் தொடங்கிவைத்தார். தற்போது சமூக வலைதளங்களில் உலவும் பல பொய்யான செய்திகளுக்கும் இவையெல்லாம் காரணங்களாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுவதாக தனது அறிக்கையில் குறிப்பிட்ட அண்ணாமலை,
“முதல்வரின் குடும்பத்தினரால் தொடங்கி வைக்கப்பட்ட காழ்ப்புணர்ச்சியும், வன்மமும் தற்போது வட மாநிலத்தவர் மீது திரும்பி விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான், வட மாநிலத்தவர் மீதான வெறுப்பு பிரச்சாரங்களுக்கு முடிவு கட்டுவாரா முதல்வர்? என்று கேட்டிருந்தேன். அதனால்தான் பிரச்னையை திசைதிருப்ப, இப்போது என்மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.
மாநிலத் தலைவர்
வேண்டும் சிபிஐ விசாரணை
"பத்திரிக்கைச் செய்தி"
நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர்.எஸ்.பாரதி அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். ஆனால் இரட்டை வேடங்கள் போடுவது என்பது திமுகவினருக்கு இயல்பானது...
- மாநில தலைவர் திரு.@annamalai_k#Annamalai pic.twitter.com/QsfoAsgU4s
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) March 6, 2023
மேலும், “60களில் இருந்து ஆட்சி கட்டிலில் பதவி சுகம் அனுபவித்த திமுக செய்யாத தமிழ் மொழித் திணிப்பை, பள்ளிகளில் “தமிழை கட்டாயப் பாடம்” ஆக்கியதன் மூலம், நாங்கள் தமிழ் மொழித் திணிப்பை செய்திருக்கிறோம். பிரதமர் மோடி தலைமையில் பாரதிய ஜனதா கட்சி, தமிழ் மொழித் திணிப்பை செய்திருக்கிறது என்பது உண்மைதான்” என்ற அவர்,
“தமிழகத்தில் தொடங்கி வைக்கப்பட்ட வெறுப்பு அரசியலால், திருப்பூரில் விரும்பத்தகாத ஒரு சம்பவம் நடைபெற்ற போது, காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்காதது ஏன்? காவல்துறை அதிகாரிகளுக்கும், திமுகவினருக்கும், தமிழக முதல்வருக்கும் இதில் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையிலே, காவல்துறையின் நடவடிக்கைகளை தாமதப்படுத்தியது யார்? என்ற விசாரணையை சிபிஐ தொடங்க வேண்டும்.
அடிக்கடி திருச்சிக்குச் செல்லும் தமிழகத்தின் டிஜிபி திருப்பூருக்கு ஏன் நேரிலே சென்று விசாரிக்கவில்லை? திருப்பூரில் உளவுத்துறை என்ன செய்து கொண்டு இருந்தது?. ஆகவே தமிழகக் காவல்துறையினர் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் என்பதை சிபிஐ விசாரித்தால்தான் நாட்டிற்கு உண்மை நிலவரம் தெரியவரும். நாட்டில் பிரிவினையில்லாத நல்லிணக்கத்தையும், நாட்டுப்பற்றுடன் கூடிய தேச ஒற்றுமையையும், பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தும்” என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Annamalai, BJP, Migrant Workers, TN Police