தமிழகத்தில் முழு ஊரடங்கு: சொந்த ஊருக்குச் செல்ல கோயம்புத்தூர் ரயில்நிலையத்தில் குவிந்த வடமாநிலத் தொழிலாளர்கள்

வடஇந்தியத் தொழிலாளர்கள்

கோவையில் பணிபுரிந்துவந்த வடமாநிலத் தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊருக்குச் செல்ல ரயில்வே நிலையத்தில் குவிந்தனர்.

 • Share this:
  தமிழகத்தில் இரண்டு வார ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கோவையில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள்
  சொந்த ஊர்களுக்கு செல்ல கோவை ரயில் நிலையத்தில் குவிந்துள்ளனர். வடமாநிலம் செல்லும் ரயில்கள் மூலம் சொந்த ஊருக்கு செல்லத் திட்டமிட்டுள்ளனர்.

  தொழில் நகரான கோவையில் லட்சக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட், ஒடிசா உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு வரும் திங்கட்கிழமை முதல் இரண்டு வார ஊரடங்கு அறிவித்துள்ளது. இதனையடுத்து வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ரயில் நிலையங்களில் குவிந்து வருகின்றனர்.

  கடந்த ஆண்டு ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது வடமாநில் தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். ஊருக்கும் செல்ல முடியாமல் உணவும் கிடைக்காமல் அவதிப்பட்டனர். பலர் நடந்தே நடந்தே சென்றதையும், கிடைத்த வாகனங்களில் ஏறி சொந்த மாநிலத்திற்கு சென்றனர். அந்த நிலை மீண்டும் வந்துவிடக்கூடாது என்பதற்காக, ஊரடங்கு அறிவிக்கப்பட்ட தகவல் வெளியானவுடன், கிடைக்கும் ரயில்கள் மூலம் வடமாநிலங்களுக்கு கிளம்புகின்றனர். கோவை ரயில் நிலைய வளாகத்தில் குடும்பத்துடன் பெட்டி, படுக்கைகளுடன் குவிந்துள்ள வடமாநில தொழிலாளர்கள் கிடைக்கும் ரயில்கள் மூலம் தங்களது சொந்த மாநிலங்களுக்கு செல்ல துவங்கியுள்ளனர்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: