Chennai Airport : சென்னை விமான நிலையத்தில் காத்திருந்து பயணிக்கும் வட மாநிலத்தவர்கள்: உணவின்றி தவிப்பு

Chennai Airport : சென்னை விமான நிலையத்தில் காத்திருந்து பயணிக்கும் வட மாநிலத்தவர்கள்: உணவின்றி தவிப்பு

சென்னை விமான நிலையம்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இன்று முழு ஊரடங்கு என்பதால் நேற்று முதலே சென்னை விமான நிலையத்திற்கு வந்து காத்திருந்து, இன்று பயணம் செய்யும் வடமாநில மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் விமான நிலையத்தில் உண்ண உணவின்றி தவித்துவருகின்றனர்.

  • Share this:

    நாளுக்கு நாள் கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்நிலையில் இரவு நேரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இன்று ஞாயிறு முழு ஊரடங்கை உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

    இன்று, முழு ஊரடங்கு என்பதால் பேருந்துகள் இயக்கப்படவில்லை இதனால் சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் பயணம் செய்ய இருக்கும் பயணிகளின் வரத்து குறைவாகவே இருக்கின்றன.

    அதுமட்டும் அன்றி வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் இன்று பேருந்துகள் இயக்காததால், இன்று மாலை செல்லவிருக்கும் விமானத்துக்கு நேற்று மாலையே சென்னை விமான நிலையத்துக்கு வந்து இரவு முழுவதும் காத்திருந்து இன்று பயணம் செய்யக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    சென்னை விமான நிலையத்தில் உணவகம் இயங்காததால் பிஸ்கட் மற்றும் தண்ணீரை குடித்துவிட்டு பயணிகள் இருக்கக் கூடிய அவலம் ஏற்பட்டுள்ளது.

    Must Read : கொரோனா காரணமாக தமிழகத்தில் வங்கிகள் செயல்படும் நேரம் குறைப்பு

    இந்நிலையில், மதுரை விமான நிலையத்திற்கு ஸ்பைஸ் ஜெட் விமான சேவை மறு அறிவிப்பு வரும்வரை நிறுத்தப்படுவதாக அறிவிப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: