காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் பருவமழை தீவிரமடையும்: வானிலை மையம்

news18
Updated: July 12, 2018, 12:28 PM IST
காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் பருவமழை தீவிரமடையும்: வானிலை மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம்
news18
Updated: July 12, 2018, 12:28 PM IST
வங்கக் கடலில் அடுத்த 48  மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி பருவமழை மேலும் தீவிரம் அடையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தீவிரம் அடைந்து வரும் தென்மேற்குப் பருவமழையால் மத்திய மற்றும் தென் இந்திய பகுதிகளில் அடுத்த 4 தினங்களுக்கு மழை தொடரும் என தெரிவித்துள்ளது. வட மேற்கு மாநிலங்களில் இன்று முதல் பருவ மழையால் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, வட மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்குப் பருவமழை காலகட்டத்தில் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்போது அதன் ஈர்ப்புவிசை காரணமாக தெற்கு மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தென் மேற்கு பருவமழையை மேலும் வலுவடைய செய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
First published: July 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...