Tamil News Live: சீர்காழியில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

Weather & Rain News Updates Live: தமிழ்நாட்டில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை அப்டேட் மற்றும் உலக நிகழ்வுகளை உடனுக்குடன் இங்கு அறியலாம்

  • News18 Tamil
  • | November 16, 2022, 19:51 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 24 DAYS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    19:45 (IST)

    மயிலாடுதுறை மாவட்டத்தில்  சீர்காழி தாலுகாவில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவு

    17:18 (IST)


    சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள கல்லூரி மாணவர்கள் விடுதியில்  தீ விபத்து.


    12:42 (IST)

    ஜி-20யின் தலைமை பொறுப்பு இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டது!

    இந்தோனேஷியா பாலியில் நடந்த ஜி-20 அமைப்பின் மாநாட்டில், தலைமை பொறுப்பு இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டது.

    12:33 (IST)

    விண்ணில் பாய்ந்தது ஆர்டெமிஸ் விண்கலம்!

    நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதற்காக ஆர்டெமிஸ் விண்கலத்தை ஏவியது நாசா. எரிபொருள் கசிவால் 45 நிமிடம் தாமதமாக ஏவப்பட்டது.

    8:2 (IST)

    2024 அதிபர் தேர்தலுக்கு விண்ணபித்த ட்ரம்ப்!

    2024ல் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விண்ணப்பம். 3ஆம் முறையாக தேர்தலில் போட்டியிட விண்ணபித்துள்ளார்.

    6:58 (IST)

    4 மாவட்டங்களில் மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

    தமிழ்நாட்டில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் கோயம்புத்தூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.

     - வானிலை ஆய்வு மையம் தகவல்