Tamil News Live: மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நாளை உள்ளுர் விடுமுறை

Weather & Rain News Updates Live: தமிழ்நாட்டில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை அப்டேட் மற்றும் உலக நிகழ்வுகளை உடனுக்குடன் இங்கு அறியலாம்

  • News18 Tamil
  • | November 15, 2022, 17:35 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 15 DAYS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    20:14 (IST)

    ரூ. 200 கோடி மோசடி வழக்கு : நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸுக்கு ஜாமீன் 

    ரூ.200 கோடி பணமோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ்-க்கு  டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் மீண்டும் ஜாமின் வழங்கியது

    17:49 (IST)

    கரூர்: விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு

    கரூர் அருகே கழிவுநீர் தொட்டியில் விஷ வாயு தாக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில்  3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

    16:27 (IST)

    மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நாளை உள்ளுர் விடுமுறை

    மயிலாடுதுறையில் நடைபெற்று வரும் ஐப்பசி மாத துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்வாக வருகின்ற 16ஆம் தேதி நடைபெற உள்ள கடை முக தீர்த்த வாரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். உள்ளூர் விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் வருகின்ற 19ஆம் தேதி சனிக்கிழமை ஈடு செய்யும் வகையில் பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    16:25 (IST)

    அதிகாரிகள் சிறை செல்ல நேரிடும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை

    தருமபுர ஆதீன மரத்திற்கு சொந்தமான திருச்சி உஜ்ஜீவநாதர் கோவில்  பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள 100 கோடி ரூபாய்  மதிப்பு  சொத்துகளை மீட்பதில் ஒத்துழைக்க மறுக்கும்  அரசு அதிகாரிகள் சிறை செல்ல நேரிடும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    15:7 (IST)

    கனியாமூர் பள்ளி - வகுப்புகள் தொடங்க அனுமதி 

    கனியாமூர் பள்ளியில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளை தொடங்கலாம் என பள்ளிக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    13:59 (IST)

    ஐபிஎல் ஆட்டங்களில் இருந்து பொல்லார்ட் ஓய்வு!

    மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வந்த மேற்கு இந்திய அணி வீரர் கைரன் பொல்லார்ட் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.


    12:40 (IST)

    கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்: அலட்சியமாக இருந்த இருவர் இடைநீக்கம்

    கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் அலட்சியமாக இருந்த தலைமை மருத்துவ அதிகாரி சோமசுந்தர் மற்றும் மருத்துவ உதவிப் பேராசிரியர் டாக்டர் பால் ராம் சங்கர் இடை நீக்கம் செய்யப்பட்டனர். 

    11:57 (IST)

    கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழப்பு: ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் - அன்புமணி 

    அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். மருத்துவர்கள் மீது தவறு இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

    11:18 (IST)

    பிரியாவின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் - ஈபிஎஸ்

    அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்திற்கு திமுக அரசு தான் காரணமென எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு பொறுப்பேற்று, பிரியா குடும்பத்தினருக்கு ரூ. 1 கோடி  இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

    8:25 (IST)

    உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு!

    தவறான சிகிச்சையால் உயிரிழந்த பிரியாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும்.
    தவறான சிகிச்சை அளித்த 2 மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள். மேலும் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    - அமைச்சர் மா.சுப்பிரமணியன்