ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

வடகிழக்கு பருவ மழை.. zoom செயலி மூலமாக பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த கவுன்சிலர்...

வடகிழக்கு பருவ மழை.. zoom செயலி மூலமாக பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த கவுன்சிலர்...

வடகிழக்கு பருவமழை - ஜூம் செயலி

வடகிழக்கு பருவமழை - ஜூம் செயலி

வடகிழக்கு பருவ மழையால் ஜூம் செயலி மூலமாக பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த கவுன்சிலர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னை 126-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமிர்தா வர்ஷினி. வார்டு கவுன்சிலராக தேர்வான பின்னர் மயிலாப்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேரில் சென்று பல்வேறு குறைகளை நிவர்த்தி செய்து வந்தார்.

பருவ மழையால் அவரது வார்டுக்கு உட்பட்ட  பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து ஜூம் செயலி மூலமாக மயிலாப்பூர் மற்றும் அதை சுற்றி அருகில் இருக்கக்கூடிய பகுதியைச் சேர்ந்த குடியிருப்பு நாள் சங்கத்தினர், சமூக ஆர்வலர் மற்றும் பொதுமக்கள் ஆகியோரை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

அவர் ஜூம் செயலிக்கான தொடர்பை அவரது WhatsApp குரூப் மூலமாக தெரியப்படுத்தினார். அந்த பகுதியில் இருக்கக் கூடிய பொதுமக்கள் மட்டுமல்லாமல், 126 வது வார்டுக்கு உட்பட்ட உதவி செயற்பொறியாளர், உதவி இன்ஜினியர் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகளையும் அந்த ஆலோசனையில் கலந்து கொள்ள வைத்தார்.

இந்த ஆலோசனையில் வடகிழக்கு பருவ மழையின் போது எந்தப் பகுதியில் மழைநீர் வடிகால்கள் தொய்வாக உள்ளது. எந்த பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளது என்பது குறித்து பொதுமக்களிடம் கேட்டு அறிந்து அவற்றை சரி செய்வதாக தெரிவித்தார்.

Also see... காற்றழுத்த தாழ்வு பகுதி.. நவம்பர் 11,12ம் தேதிகளில் அதிகனமழை - வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை

மேலும் ஜூம் செயலி மூலமாக வார்டு கவுன்சிலரை தொடர்பு கொள்வது மிகவும் எளிதாக இருப்பதாக அப்பகுதி குடியிருப்பு நல சங்கத்தினரும், பொதுமக்களும் தெரிவிக்கின்றனர். 126 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் இருக்கக்கூடிய குடிநீர் வாரியம், சென்னை மாநகராட்சி, மின்வாரியம் உள்ளிட்ட அனைத்து தொலைபேசி எண்களையும் அவர் தெரியப்படுத்தி இருந்தார். எந்தெந்த பிரச்னைக்கு தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Heavy Rainfall, North East Monsoon