• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நவம்பர் 1-ம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்க வாய்ப்பு

நவம்பர் 1-ம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்க வாய்ப்பு

இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை வழக்கத்தைவிட தாமதாமாக நவம்பர் 1-ம் தேதி தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை நவம்பர் 1-ம் தேதி தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஸ்டெல்லா இன்று  செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. மேலும் வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளது. இதனால் வடகிழக்குப் பருவமழை நவம்பர் 1-ம் தேதி துவங்க சாதகமான நிலை உருவாகி உள்ளது.

    தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா, ராயலசீமா, கர்நாடகா உள்ளிட்ட இடங்களில் வடகிழக்குப் பருவமழை துவங்குவதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    அக்டோபர் 1 முதல் இன்றுவரை தமிழகம் மற்றும் புதுவையில் 16 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இயல்பை விட (17 செ.மீ.) 9 சதவீதம் குறைவாக மழை பதிவாகி உள்ளது. இதேகாலகட்டத்தில் சென்னையில் 12 செ.மீ. மழை பெய்துள்ளது. இயல்பை (24 செ.மீ.) காட்டிலும் 51% குறைவாக பதிவாகி உள்ளது.

    இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை வழக்கத்தைவிட தாமதாமாக தொடங்குகிறது. அண்மையில் லூபான் மற்றும் டிட்லி புயல் உருவானதன் காரணமாக பருவமழை தொடங்க தாமதமாகி உள்ளது என்றார் ஸ்டெல்லா.

    Also watch

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:DS Gopinath
    First published: