Home /News /tamil-nadu /

Breaking | வடகிழக்குப் பருவமழை தொடங்கியது: கனமழை எச்சரிக்கை

Breaking | வடகிழக்குப் பருவமழை தொடங்கியது: கனமழை எச்சரிக்கை

சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகம், புதுச்சேரி கேரளா, கர்நாடகா,  கடற்கரை பகுதிகளில் வடக்கிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

  • News18
  • Last Updated :
தமிழகம், புதுச்சேரியில் இன்று வடகிழக்குப் பருவமழை தொடங்கியது என்று  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வடகிழக்கு பருவமழை கடந்த 20-ம் தேதியே தொடங்க வேண்டிய நிலையில், அண்மையில் அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் புயல் வீசியதால் காற்றின் திசைமாறி பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. 21-ம் தேதியுடன் தென்மேற்கு பருவமழையும் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் முதல் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதாக என தெரிவித்தார்.

மேலும் நடப்பாண்டில் இயல்பை விட 12 விழுக்காடு அதிகம் பருவமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளதாகவும், அக்டோபரில் எதிர்பார்த்ததை விட குறைவான அளவே மழை பெய்துள்ளதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழகம், புதுச்சேரி கேரளா, கர்நாடகாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இரவு முதல் பெய்த மழையால் வாகன ஓட்டிகள் அவதி


இதனிடையே வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் குறித்து பொதுப் பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அணைகள், பாலங்கள் குறித்த நிலவரங்களை முதலமைச்சர் கேட்டறிந்தார். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Also see...

Published by:Vaijayanthi S
First published:

Tags: North East Monsoon, Rain

அடுத்த செய்தி