முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ''பாஜகவை வீழ்த்துவதே குறிக்கோள்.. காங்கிரஸ் அல்லாத கூட்டணி கரை சேராது'' பிறந்தநாள் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!

''பாஜகவை வீழ்த்துவதே குறிக்கோள்.. காங்கிரஸ் அல்லாத கூட்டணி கரை சேராது'' பிறந்தநாள் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!

முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின்

மகாபாரதத்தில் சூதாட்டம் இருக்கிறது என்று ஆன்லைன் ரம்மிக்கு தடை செய்ய மறுக்கிறார்களா? - ஸ்டாலின் கேள்வி

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

காங்கிரஸ் அல்லாத கூட்டணி கரை சேராது. தேர்தலுக்கு பின் கூட்டணி அமைத்துக்கொள்கிறோம் என்பதும் நடைமுறைக்கு ஒவ்வாதது. பாஜகவை வீழ்த்துவதே ஒரே குறிக்கோளாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்க காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் பங்கேற்றனர்.

அதில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் எனக்கு இன்று 70 வது பிறந்த நாள். நான் தனிப்பட்ட ஸ்டாலின் அல்ல அரங்கத்தில் இருக்கும் உங்களை எல்லாம் சேர்த்து தான் நான். நான் என்றும் உங்களின் ஒருவன். ஸ்டாலின் எனும் பெயருக்கும் கோடி கணக்கான உயிர்கள், உடன் பிறப்புகள் அடங்கி இருக்கிறது.

மு.க.ஸ்டாலின் எனும் நான் வீட்டுக்கு விளக்காக நாட்டுக்கு தொண்டனாக, மக்களின் கவலையை போக்கும் தலைவனாக எனது சக்தியை மீறி உழைப்பேன்.

கல்வியில் சமூகத்தில் முன்னேற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இதற்காகத்தான் திராவிட முன்னேற்ற கழகம் நிரந்தரமாக ஆட்சியில் இருக்க வேண்டும் என்று கூறுகிறேன். கொள்கையை பரப்ப கட்சி கொள்கையை நிறைவேற்ற ஆட்சி. தேர்தலில் 505 வாக்குறுதிகளை நிறைவேற்றிடம் அதில் 85 % வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். மீதம் உள்ளதை அடுத்த ஆண்டுக்குள் நிறைவேற்றி முடிக்கப்படும். நிறைய திட்டங்கள் சொல்லாததையும் செய்திருக்கிறோம். சொன்னதையும் செய்வோம் சொல்வதை செய்வோம் என்பது கலைஞர் பாணி. சொல்லாததையும் செய்வோம் சொல்லாமல் செய்வோம் என்பது என்னுடைய பாணி.

எனக்கு சீனியர்களும் ஜூனியர்களும் வாழ்த்து தெரிவிக்க வந்திருக்கிறார்கள். இது எனது பிறந்தநாள் பொதுக்கூட்ட மேடை மட்டும் அல்லாது இந்தியாவின் உரிய அரசியல் மேடையாக இது அமைந்திருக்கிறது. யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை விட யார் ஆட்சிக்கு வர கூடாது என்பதற்கான தேர்தல்தான் 2024 தேர்தல். பாஜவை வீழ்த்தி ஆக வேண்டும். ஒற்றுமை உணர்வு வந்துவிட்டால் வெற்றி பெற்று விடலாம். தமிழ்நாட்டைப் போல ஒற்றுமையான கூட்டணியை அகில இந்திய அளவில் ஒன்றிணையுங்கள் என்று கூறினேன். காங்கிரஸ் இல்லாத கூட்டணி கரை சேராது. தேர்தலுக்குப் பிறகு கூட்டணி வைத்துக் கொள்கிறோம் என்பதும் நடைமுறைக்கு சரி வாரது.

ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்துவிட்டு நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் அடிக்கல் நாட்டி விட்டு இன்றுவரை ஒரு செங்கலுக்கு மேல் வைக்காமல் தமிழ்நாட்டை அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறது பாஜக அரசு. சமஸ்கிருதத்திற்கு கோடி கோடியாய் பணத்தை நீட்டுவாய். சங்க தமிழுக்கு நிதி ஒதுக்கவில்லை.

ஆன்லைன் ரம்மிக்கு தடை இன்னும் அறிவிக்காமல் இருக்கிறது.

மகாபாரதத்தில் சூதாட்டம் இருக்கிறது என்று ஆன்லைன் ரம்மிக்கு தடை செய்ய மறுக்கிறார்களா?

இந்திய துணை கண்டம் முழுவதும் எடுத்து செல்லுங்கள். அடுத்த மார்ச் என்பது அகில இந்திய அரசியலுக்கு அடித்தளமாக அமையட்டும். 2024 நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். களம் நமக்காக காத்திருக்கிறது நாற்பதும் நமதே! நாடும் நமதே!” என தெரிவித்தார்.

First published:

Tags: CM MK Stalin, Congress alliance, DMK Alliance, MK Stalin