தமிழகத்தில் நாளை தொடங்குகிறது வேட்புமனு தாக்கல்...

தேர்தல் ஆணையம்

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோருக்கான, வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடங்குகிறது.

 • Share this:
  நாளை முதல் வேட்பாளர்கள் மனு தாக்கல் தொடங்கவுள்ளதால், அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோருக்கான, வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடங்குகிறது. காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கி பிற்பகல் 3 மணி வரை நடைபெறும். பெரும்பாலான அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. எனவே சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் உரிய விவரங்களுடன் வேட்புமனு தாக்கலுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர். தேர்தல் அலுவலகத்திற்கு சென்று வேட்புமனு தாக்கல் செய்யும் போது பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது.

  அதில் அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து வர வேண்டும். வேட்பாளர்கள் தங்களுடன் இரண்டு நபர்களை மட்டுமே உடன் அழைத்து வர வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அவற்றை தீவிரமாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

  மேலும் படிக்க... தனது பிறந்தநாளில் வாளால் கேக் வெட்டி போலீசாரிடம் சிக்கிய ரவுடி...

  மேலும், மார்ச் 19ம் தேதி மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  வேட்புமனு மீதான பரிசீலனை மார்ச் 20ம் தேதி நடத்தப்படும்.  மார்ச் 22ம் தேதி வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாகும். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வேட்பு மனுத்தாக்கல் நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.  ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் மே 2 வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: