தமிழகம், புதுவை, கேரளாவில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்..

தமிழகம், புதுவை, கேரளாவில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்..

தேர்தல் ஆணையம்

தமிழகம், புதுச்சேரி, கேரள மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

 • Share this:
  தமிழகத்தில் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் 30 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், கேரளாவில் 140 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கும் அன்றைய தினம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தீவிரமாக உள்ளன.

  இந்நிலையில், தமிழகம், புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வரும் 19-ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தினமும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

  சனி, ஞாயிறு ஆகிய நாட்கள் விடுமுறை என்பதால், நாளையும், நாளை மறுநாளும் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கலின் போது வேட்பாளருடன் இருவர் மட்டும் தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் வேட்புமனு தாக்கல் செய்ய வருபவர்களின் வாகனங்கள் 100 மீட்டருக்கு அப்பால் நிறுத்துவதற்காக பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, சாலையில் எல்லைக்கோடு வரையப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க... சென்னை பெட்ரோலிய கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021..

  அத்துடன், கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை வரும் 20-ம் தேதி நடைபெற உள்ளது. மனுக்களை திரும்பப் பெற 22ம் தேதி கடைசி நாளாகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது. அதிமுக கூட்டணி கட்சிகள் வரும் 15-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: