சென்னையில் கொரோனா பாதிப்பை தடுக்க எடுக்கும் நடவடிக்கைகள் என்ன? சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் விளக்கம்

சென்னையில் கொரோனா பாதிப்பை தடுக்க எடுக்கும் நடவடிக்கைகள் என்ன? சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் விளக்கம்
ராதாகிருஷ்ணன் (கோப்புப்படம்)
  • Share this:
சென்னையில் கொரோனா பரவும் விதம் மிக வேகமாக உள்ளது. ஒரு நாளைக்கு சராசரியாக 500 பேர் விதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். எனவே, சென்னையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரியாக ராதா கிருஷ்ணன் சில வாரங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டார். சென்னையில் கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து ராதாகிருஷ்ணனிடம் நமது செய்தியாளர் சாரதா நேர்காணல் செய்துள்ளார். 

சென்னையில் நோய் பரவல் அதிகமாக இருக்கிறது. தடுப்பதற்கான புதிய உத்தி ஏதாவது திட்டமிடுகிறீர்களா?

பரிசோதனை செய்வதும் தொடர்புகளை கண்டறிவதும் தான் கையாள வேண்டிய உத்தி. இதை தவிர உலக நாடுகளில் வேறு எங்கும் கூட எந்த உத்தியும் இல்லை.  சென்னையில் ஒவ்வொரு மண்டலமும் ஒரு மாவட்டம் போல. ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ற உத்தியை கடைப்பிடித்து வருகிறோம். சமூக இடைவெளி கடைப்பிடிக்க முடியாததால் குடிசைப்பகுதிகளில் கொரோனாவை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது. அந்த பகுதிகளுக்கான தனி உத்தியை பயன்படுத்தி வருகிறோம். ராயபுரம் போன்ற மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதிகளில் வீடு வீடாக சென்று தொற்று உள்ளவர்களையும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் கண்டறிந்து வருகிறோம். மக்களிடம்  தன்னார்வ தொண்டு நிறுவனங்களை பணியில்  இணைத்துள்ளோம்.


ஆனால் பரவலின் தீவிரம் அச்சமூட்டுகிறதே? 

நோய் பரவலின் தீவிரத்தை தடுக்க அதாவது ஒருவரிடமிருந்து எத்தனை பேருக்கு பரவுகிறது என்ற எண்ணிக்கையை குறைப்பதற்கான தீவிர முயற்சிகள் எடுத்து வருகிறோம். ஆனால் மேஜிக் போல் எதுவும் நடக்காது. மருந்து, தடுப்பு மருந்து இல்லாததால் நோய் பரவாமல் தடுப்பது தான் நமது நோக்கம். அதற்கு 'Herd masking' அதாவது அனைவரும் முக கவசம் அணிவது மிக மிக அவசியம்.

வயதானவர்களைக் கண்டறிந்து காக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?சென்னை மாநகராட்சியில் பதிவு செய்து சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றுக்கு மருந்து பெற்று வரும் ஒரு லட்சம் வயதானவர்களைக் கண்டறிந்துள்ளோம். அவர்களை கண்காணித்து அவர்களுக்கு அறிகுறிகள் இருந்தால் கொரோனா பரிசோதனை எடுக்க முடிவு செய்து பணிகள் நடக்கின்றன.

மக்கள் அடர்த்தி அதிகமுள்ள குடிசைப்பகுதிகளில் நோய் பரவலை தடுக்க என்ன வழி?

அந்த ஆபத்தை தடுக்க முயற்சிக்கிறோம். 10 சதுர அடி போன்ற குறுகிய இடத்தில் குடிசைப்பகுதிகளில் வசிக்கும் vulnerable அதாவது வயதானவர்கள் மற்றும் பிற நோய்கள் இருப்பவர்களை சமுக நல கூடங்களுக்கு மாற்றியுள்ளோம். எஸ்.எம்.நகரிலிருந்து சிந்தாதிரிப்பேட்டை சமூக நலக்கூடத்தில் உள்ளனர். அதே போன்று ராயபுரம், சோழிங்கநல்லூர் மண்டலங்களிலிருந்து  வயதானவர்கள், சர்க்கரை- ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளை சமூக நல கூடங்களுக்கு மாற்றியுள்ளோம். இதுவரை 500-க்கும் மேற்பட்டோர் மாற்றப்பட்டுள்ளனர்.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தெர்மல் ஸ்கேனர் பயன்படுத்தி காய்ச்சல் இருக்கிறதா என உடனே கண்டறிய முடியும். அறிகுறிகள் இருப்பவர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. எண்ணிக்கை அதிகமாவது உண்மையான பிரச்னை இல்லை. பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிய வேண்டும்.

எண்ணிக்கை அதிகரித்தாலும் மீள முடியும் என்கிற நம்பிக்கையை எதிலிருந்து வெளிப்படுத்துகிறீர்கள்? 

கொரோனாவை எப்படி தடுப்பது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஊடக கவனம் இருக்க வேண்டும். எண்ணிக்கை என்பது நோய் பரவல் குறித்து அரசு தெரிந்து கொள்வதற்காக. ஆனால் நோயை தவிர்ப்பது எப்படி என்பது குறித்து பேச வேண்டும். சென்னையில் 10,000தைக் கடந்தது பாதிப்பு என்பது தான் செய்தியாகிறது. அதில் 4,844 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர் என்பது செய்தியாவதில்லை.

திருவல்லிக்கேணி வி.ஆர்.பிள்ளை தெருவில் 42 பேருக்கு கொரோனா வந்து பின் அந்த தெருவில் கொரோனாவிலிருந்து முழுவதுமாக மீண்டு யாருக்கும் தொற்று இல்லாத நிலையை ஏற்படுத்தினோம். அதற்கு மக்கள் ஒத்துழைப்பு தான் மிகப்பெரிய காரணம்.

Also see:
First published: May 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading