அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தை நிரப்ப பொற்றாமரைக் குளத்து நீர் வேண்டாம் - உயர் நீதிமன்றம்

news18
Updated: August 19, 2019, 5:52 PM IST
அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தை நிரப்ப பொற்றாமரைக் குளத்து நீர் வேண்டாம் - உயர் நீதிமன்றம்
அனந்தசரஸ் குளம்
news18
Updated: August 19, 2019, 5:52 PM IST
அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தை, பொற்றாமரை குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட நீரால் நிரப்ப வேண்டாம் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது

அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள குளத்தை தூர்வார கோரி அசோகன் என்பவர் தாக்கல் செய்த வழக்கு நீதிபதி ஆதிகேசவலு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் காஞ்சிபுர மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ராமராஜ் தாக்கல் செய்த அறிக்கையில், ஆனந்தசரஸ் குளம், பொற்றாமரை குளம் மற்றும் கோவிலில் உள்ள ஆழ்துளை கிணற்றில் உள்ள நீரை சேகரித்து ஆய்வு செய்ததில், நீரின் கடினத்தன்மை, அமிலத்தன்மை, என அனைத்தும் நிர்ணயிக்கப்பட்ட அளவில் இருப்பதாகவும், குடிநீருக்கு இணையான தரம் கொண்ட நீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.


ஆனால் பொற்றாமரை குளத்தின் நீர் மட்டும் இளம் பச்சை நிறத்தில் மாறி இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

மழை நீரால் அனந்தசரஸ் குளம் நிரம்பாவிட்டால், கோவிலில் உள்ள ஆழ்துளை கிணற்று நீரை கொண்டு ஆனந்தசரஸ் குளம் நிரப்பப்படும் எனவும் அறநிலைய துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி ஆதிகேசவலு, பொற்றாமரை குளத்தின் நீரை, அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தில் நிரப்ப வேண்டாம் என அறிவுறுத்தினார்.

Loading...

இது தொடர்பாக எடுத்த நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய இந்து அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை வரும் 22-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

First published: August 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...