தமிழகத்தில் ஜூன் 3 முதல் 6 வரை தடுப்பூசி போடும் பணிகள் தற்காலிக நிறுத்தம்! - சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களை கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்தி கொள்ள ஆர்வம் காட்டிவருகின்றனர்.

 • Share this:
  தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு தளர்வுகளற்ற ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.

  இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை ஏப்ரல் மாதத்தில் தீவிரமடைந்ததையடுத்து 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதியளிக்க வேண்டும் என மாநில அரசுகள் கோரிக்கை விடுத்தன. இதனை ஏற்று மே 1-ம் தேதி முதல் 18வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

  தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் தீவிரப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் பொதுமக்களிடம் தயக்கம் இருந்த போதிலும் மத்திய , மாநில அரசுகள் ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணமாக இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களை கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்தி கொள்ள ஆர்வம் காட்டிவருகின்றனர்.

  Also Read: கொரோனாவுக்கு எதிரான புதிய நம்பிக்கை: மீண்டவர்கள், தடுப்பூசிப் போட்டுக் கொண்டவர்களுக்கு நீண்ட கால பாதுகாப்பு- ஆய்வில் தகவல்

  இந்நிலையில் தமிழகத்தில் ஜூன் 3-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை கொரோனா தடுப்பூசி செலுத்துவது நிறுத்தப்படும் என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்தவர், “ஜூன் மாதத்துக்கான முதல் தவணை தடுப்பூசி டோஸ் 6-ம் தேதி தான் வருகிறது. இதன்காரணமாக ஜூன் 3-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தப்படாது.

  கடந்த மாதம் தமிழகத்திற்கு 2 மடங்கிற்கு மேல் தடுப்பூசி டோஸ் ஒதுக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜூன் மாதம் 42.58 லட்சம் தடுப்பூசி டோஸ் ஒதுக்கீடு செய்வதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.  மத்திய அரசிடம் இருந்து இந்த மாதத்திற்கான 1.74 லட்சம் தடுப்பூசி டோஸ் வரவேண்டியுள்ளது. எனவே தற்போது இருப்பில் உள்ள தடுப்பூசி டோஸ்களை ஆட்சியாளர்கள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.
  Published by:Ramprasath H
  First published: