ஒன்றிய அரசு என அழைப்பதால் எந்த பயனும் இல்லை, பாமக மத்திய அரசு என்று தான் அழைக்கும் - அன்புமணி ராமதாஸ்

அன்புமணி, ராமதாஸ்

பாமகவின் நிழல் நிதிநிலை அறிக்கையில், 2021  - 2022ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் வருவாய் வரவுகள் 4 கோடியே 98 லட்சத்து 585 கோடியாக இருக்கும் என்றும் இது கடந்த ஆண்டின் வருவாயை விட இரண்டு கோடியே 22 லட்சத்து 125 கோடி ரூபாய் அதிகமாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • Share this:
செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை தமிழக அரசே ஏற்று நடத்துதல், தமிழர்களுக்கு மட்டுமே அரசு வேலை வாய்ப்பு, சென்னை-சேலம் எட்டு வழி சாலை திட்டம் ரத்து என்பன உள்ளிட்ட அறிவுப்புகள் கொண்ட பாட்டாளி மக்கள் கட்சியின் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

பாட்டாளி மக்கள் கட்சியின் 19-வது நிழல் நிதிநிலை அறிக்கை வழக்கம்போல பெண் ஊடகவியலாளர் ஒருவர் மூலம் சென்னையில் வெளியிடப்பட்டது.  பெண் ஊடகவியலாளர் ஷெர்லி வெளியிட, அதனை கட்சியின் பொருளாளர் திலகபாமா பெற்றுக்கொண்டார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் காணொலி மூலம் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்க, கட்சியின் தலைவர் ஜி.கே. மணி பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் மற்றும் வழக்கறிஞர் பாலு ஆகியோர் நேரடியாக கலந்து கொண்டனர்.

123 தலைப்புகளில் 481 பரிந்துரைகளோடு தயாரிக்கப்பட்டுள்ள இந்த நிழல் நிதிநிலை அறிக்கையில், 2021  - 2022ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் வருவாய் வரவுகள் 4 கோடியே 98 லட்சத்து 585 கோடியாக இருக்கும் என்றும் இது கடந்த ஆண்டின் வருவாயை விட இரண்டு கோடியே 22 லட்சத்து 125 கோடி ரூபாய் அதிகமாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read:   ரூ.15,000 கட்டண பாக்கிக்காக 75 நாட்கள் பிணவறையில் வைக்கப்பட்ட கணவரின் சடலம்! - மனைவி பகீர் குற்றச்சாட்டு!

பொருளாதார மந்த நிலை தொடரும் என்றும் 2021-22-ம் ஆண்டில் ஒரு லட்சம் கோடிக்கும் கூடுதலாக தமிழக அரசு கடன் வாங்க நேரிடும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சென்னை புறநகரில் 10 ஏக்கர் பரப்பளவில் நினைவு கோட்டம் அமைக்கப்படுவதுடன் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என உரைக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை தமிழக அரசே ஏற்று நடத்தி, அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி உற்பத்தி செய்யப்படும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read:  75 நாட்கள் பிணவறையில் வைக்கப்பட்ட கணவரின் சடலம்! - மனைவி பகீர்

கல்வி வளர்ச்சிக்கு புதிய நிறுவனங்கள் தொடங்கப்படுவது, வேலைவாய்ப்பை பெருக்க திட்டங்கள், வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ஐந்தாயிரம் ரூபாய் உதவித் தொகை, ஏழை குடும்பங்களுக்கு மாதம் ரூபாய் 2000 உதவித்தொகை வழங்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 15 முதல் முழுமையான மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் நிழல் நிதி அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களுக்கு மட்டுமே அரசு வேலைவாய்ப்பு, மின் கட்டணம் குறைப்பு, விடுபட்டுள்ள 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை செப்டம்பர் மாதத்திலும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஜனவரி மாதத்துக்குள் நடத்துவது என்றும் வேளாண் வளர்ச்சி, கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் உள்ளிட்டவை நிழல் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளன.

Also Read: பெண்ணுக்கு தடுப்பூசி செலுத்தும் அரசியல் பிரமுகர்

மும்மொழி கொள்கை இல்லாத புதிய கல்வி கொள்கை, கல்விக் கடன்கள் தள்ளுபடி, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பது, சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது, அனைத்து சாதியினருக்கும் உள்ஒதுக்கீடு ஆகியவற்றுடன்  சென்னை-சேலம் எட்டு வழி சாலை திட்டத்தை ரத்து என்பதும் நிழல் நிதி அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்களாகும்.

தமிழ்நாட்டில் மணல் குவாரிகள் அனைத்தும் மூடப்படும் என்றும் மாநில நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் முற்றிலும் ரத்து செய்யப்படும் என்றும் சென்னை கன்னியாகுமரி கிழக்கு கடற்கரை சாலை 8 வழிச்சாலையாக மாற்றப்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: பூமியின் அழிவு எப்போது?: சரியாக கணித்த ஆராய்ச்சியாளர்கள் 

மெட்ரோ ரயில் மற்றும் தொடர்வண்டி திட்டங்களை மேம்படுத்துதல், கீழடி அருங்காட்சியகம் விரிவாக்கம், 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பிறக்கும் பெண் குழந்தைகளின் பதினெட்டாவது வயதில், 5 லட்சம் ரூபாய் அவர்களுக்கு கிடைக்கும் வகையில் காப்பீடு திட்டம் மற்றும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து அரசு ஊழியர்களுக்கான நலன் சார்ந்த திட்டங்களை நடைமுறைப்படுத்தப்படுத்துதல் ஆகியனவும் பாமக வெளியிட்டுள்ள நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் தமிழக அரசு ஒன்றிய அரசு என்று அழைப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு , பெயர் மாற்றி அழைப்பதால் எந்த பயனும் இல்லை, பாமக மத்திய அரசு என்று தான் அழைக்கும் என அன்பு மணி கூறினார்.
Published by:Arun
First published: