வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவது இல்லை என்றும் மக்களைவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு கிடையாது என்றும் ரஜினிகாந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “ நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் என்னுடைய ஆதரவு எந்தக் கட்சிக்கும் ஆதரவு கிடையாது அதனால் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரில் என்னுடைய படமோ, மன்றத்தின் கொடியோ எந்தக் கட்சிக்கும் ஆதரவாகவோ பிரச்சாரம் செய்வதற்காகவோ யாரும் பயன்படுத்தக்கூடாது.
தமிழ்நாட்டின் முக்கியமான பிரச்சனை தண்ணீர் வரவிருக்கும் தேர்தலில் மத்தில்யில் நிலையான வலுவான ஆட்சி அமைத்து யார் நாட்டின் தண்ணீர் பிரச்சனையை நிரந்தரமாக தீர்த்து வைக்கக்கூடிய திட்டங்களை வகுத்து அதை உறுதியாக செயல்படுத்துவார்கள் என்று நம்புகிறீர்களோ அவர்களுக்கு நீங்கள் சிந்தித்து ஆராய்ந்து தவறாமல் வாக்களிக்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாவட்டச் செயலாளர்களுடன் ரஜினி இன்று ஆலோசனை நடத்திய பிற்கு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also see... தீவிரவாதத்தை ஒழிக்க அனைத்துக்கட்சிக் கூட்டம் தொடக்கம்
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.