Home /News /tamil-nadu /

உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை - ரஜினி மக்கள் மன்றம்

உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை - ரஜினி மக்கள் மன்றம்

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

  • News18
  • Last Updated :
    உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் ரஜினியின் பெயர், புகைப்படத்தை வைத்து யாரும் வாக்கு கேட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரஜினி மக்கள் மன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட மற்றும் பிரிவினைக்கு உள்ளான 9 மாவட்டங்கள் தவிர பிற 27 மாவட்டங்களில் வரும் 27 மற்றும் 30-ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.

    இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு அளிக்கவில்லை. எனவே, ரஜினியின் பெயர், புகைப்படம், ரசிகர் மன்றம், ரஜினி மக்கள் மன்ற கொடி ஆகியவற்றை பயன்படுத்தி வாக்கு சேகரித்தால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரஜினி மக்கள் மன்றம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.



    2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக ரஜினிகாந்த் அறிவித்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு அவர் புதிய கட்சியை தொடங்குவார் என்று செய்திகள் வெளியானது.

    பொங்கலை அடுத்து மதுரையில் பிரமாண்ட மாநாடு நடத்தி, கட்சியின் பெயரை அவர் அறிவிப்பார் என்று தகவல்கள் கூறின.

    Also See..

    என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை வீண் போகாது! ரசிகர்களுக்கு சேதி சொன்ன ரஜினிகாந்த்

    ரஜினியின் முன் ராகவா லாரன்ஸ் விமர்சனம்... சீமான் பதில்...!



    Published by:Sankar
    First published:

    Tags: Local Body Election 2019, Rajinikanth

    அடுத்த செய்தி