Home /News /tamil-nadu /

ஆளுநர் வாகனம் மீது கற்கள், கொடிகள் வீசப்படவில்லை - முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

ஆளுநர் வாகனம் மீது கற்கள், கொடிகள் வீசப்படவில்லை - முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

CM MK Stalin | தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்ற வாகனம் மீது கற்கள் மற்றும் கொடிகள் ஏதும் வீசப்படவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் விளக்கமளித்துள்ளார்.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தொன்மைவாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகா சந்நிதானம் ஞானரத யாத்திரையை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று துவக்கி வைத்தார். அப்போது ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திக, திவிக, விசிக, சிபிஐ, சிபிஎம் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது ஆளுநர் வாகனம் மீது கல் மற்றும் கருப்பு கொடி வீசப்படட்டதாக புகார் எழுந்தது.

    தமிழக ஆளுநர் வாகனத்திற்கு பாதுகாப்பு வழங்க அரசு தவறிவிட்டதால் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் பதவி விலக வேண்டுமென பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இதனிடையே சட்டப்பேரவையிலும் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் ஆளுநர் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வெளிநடப்பு செய்தனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் விளக்கமளித்தார். அப்போது, ஆளுநர் அவரது பாதுகாப்பு வாகனம் கற்கள் கொடிகளால் எந்த பாதிப்பும் ஏற்பட வில்லை என ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார். திட்டமிட்டு ஒருங்கிணைப்பாளர்கள் சேர்ந்து அறிக்கை கொடுப்பார்கள். ஆனால் இந்த அறிக்கை மட்டும் தனி தனியாக வந்தது அப்போதே புரிந்து கொள்ள வேண்டும். விடியா அரசின் முதல்வர் என்ன பதில் சொல்ல போகிறார் என்று சொல்லி விட்டு பதிலை கேட்காமலே எதிர்கட்சியினர் வெளியேறி விட்டனர். போராட்டம் நடத்தியவர்கள் மீது சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    Also Read : கோளரங்கம் பற்றி கேளுங்க... கோளாறான கேள்வி எல்லாம் கேட்கிறீங்க’ - சபாநாயகர் அப்பாவு பேச்சால் சட்டப்பேரவையில் சிரிப்பலை

    மத்திய மண்டல காவல்துறை தலைமையில் 1000 க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு இருந்தனர். கற்கள் கொடிகள் வீசப்பட்டதாக வரும் தகவலில் உண்மை இல்லை. ஆளுநர் பாதுகாப்பு அம்சங்களில் இந்த அரசு எந்த சமரசமும் செய்து கொள்ளாது. ஆளுநரை வைத்து அரசியல் செய்யலாம் என எதிர்க்கட்சி தலைவர் துணை தலைவர் நினைத்தால் அது இங்கு நடக்காது இது திமுக ஆட்சி. ஆளுநர் கான்வாய் மீது கற்கள் கொடிகள் வீசியதில் எந்த உண்மையும் இல்லை. காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுப்புகள் அமைத்து கட்டுக்குள் வைத்திருந்தனர் என்று தெரிவித்தார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: DMK, MK Stalin, TN Assembly

    அடுத்த செய்தி