ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அரையாண்டு விடுமுறை : சிறப்பு வகுப்பு நடத்தினால் நடவடிக்கை - பள்ளி கல்வித்துறை அதிரடி

அரையாண்டு விடுமுறை : சிறப்பு வகுப்பு நடத்தினால் நடவடிக்கை - பள்ளி கல்வித்துறை அதிரடி

பள்ளி மாணவர்கள்

பள்ளி மாணவர்கள்

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அசைன்மென்ட் மட்டும் வழங்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

அரையாண்டு தேர்வு விடுமுறையில் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு இன்று நிறைவடைந்து நாளை முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில் அரையாண்டு தேர்வு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அசைன்மென்ட் மட்டும் வழங்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

First published:

Tags: DPI, Half yearly examination, School education department, Tamilnadu