தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை ஏற்படவில்லை - சுகாதாரத்துறை செயலர் விளக்கம்

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை ஏற்படவில்லை - சுகாதாரத்துறை செயலர் விளக்கம்

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை ஏற்படவில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் இரண்டாவது அலையாக இந்த பாதிப்பு உருவெடுத்துள்ளது என்று சில தகவல்கள் வந்தன. இதுகுறித்து விளக்கமளித்த சுகாதாரத்துறை செயலர் கொரோனா இரண்டாவது அலை என்று கூற முடியாது என தெரிவித்துள்ளார்.

  தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை உருவாகியுள்ளதா என கேட்ட போது, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பது உண்மை. ஆனால் இரண்டாவது அலை என்று கூற முடியாது. பாதிப்பு எப்போதும் ஏற்றமும் இறக்கமமுமாக தான் இருந்துள்ளது.

  Micro containment என்பது என்ன? என்ற கேள்விக்கு பதிலளித்த ராதாகிருஷ்ணன், “தொடர்பில் இல்லாத மூன்று நபர்களுக்கு மேல் தொற்று பாதிக்கப்பட்டால் அந்த பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக micro containment பகுதியாக அறிவிக்கப்படும். அங்கு மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படும். Contact tracing எனப்படும் தொடர்பு கண்டறிதல் பணிகள் தீவிரப்படுத்தப்படும்.

  மாநிலத்தில் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுமா? என்ற கேள்விக்கு, “கொரோனா பாதிப்பு நிலவரத்தைப் பொறுத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன . தமிழகத்தில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படாமல் இருப்பது மக்கள் கையில் தான் உள்ளது.” என தெரிவித்தார்.

  கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் நிலை என்ன என கேட்ட போது “உருமாறிய கொரோனா உள்ளதா என கண்டறிய மாதிரிகள் புனேவுக்கும் ஹைதராபாத்துக்கும் அனுப்பப்படுகின்றன. அரசு அமைத்திருக்கும் வல்லுநர் குழு அதையே பரிந்துரைத்திருக்கிறது.” என கூறினார்.

  தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1636 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 633 பேருக்கும், செங்கல்பட்டில் 178 பேருக்கும், கோவையில் 133 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 8,71,440 பேருக்கு கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  கொரோனா சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில் 6 பேர் மற்றும் அரசு மருத்துவமனயில் 6 பேர் என 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,630 ஆக அதிகரித்துள்ளது.

  மேலும் கொரோனாவிலிருந்து 1023 பேர் குணமடைந்துள்ள நிலையில் மொத்தமாக 8,49,064 பேர் கொரோனாவிலிருந்து விடுப்பட்டு வீடு திரும்பி உள்ளனர்.
  Published by:Arun
  First published: