திருப்பூரில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு 2 மாத ஊதியம் வழங்காததை கண்டித்து போராட்டம்

திருப்பூரில் ஒப்பந்த தூய்மௌ பணியாளர்களுக்கு 2 மாத ஊதியம் வழங்காததை கண்டித்து மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூரில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு 2 மாத ஊதியம் வழங்காததை கண்டித்து போராட்டம்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள்
  • News18
  • Last Updated: August 25, 2020, 12:48 PM IST
  • Share this:
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கொரோனா காலத்தில் முன்னின்று பணியாற்றி வரும் சூழலிலும் தங்களுக்கு 7500 ரூபாய் மட்டுமே ஊதியம் வழங்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

தற்போது 2 மாதம் சம்பளம் வழங்காமல் தங்களை அலைகழிப்பதாகவும், 700 ரூபாய் பி.எஃப் பணம் பிடித்தம் செய்யப்பட்டு வருவதாகவும் அதற்கான ரசீதுகள் வழங்கப்படாமல் ஏமாற்றுவதாகவும் வேதனை தெரிவித்தனர்.

Also read... கொரோனாவால் வேலை இழப்பு... தாய் வீட்டில் நகை திருடிய மகன் கைது...!


மேலும் தங்கள் 2 மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் இதுவரை பிடித்தம் செய்யப்பட்ட பி‌.எஃப் தொகைக்கான ரசீதுகளை வழங்க கோரியும் 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் திருப்பூர் சுகாதார அலுவலகம், வேலம்பாளையம் 1-வது மண்டலம் மற்றும் நல்லூர் 3-வது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
First published: August 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading