அணுக்கழிவு மையத்தால் அபாயம் இல்லை...! கூடங்குளம் அணுமின் நிலையம் விளக்கம்

அணுக்கழிவு மையத்தால் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நிலம் மற்றும் நீர் மாசுபடாது என்றும் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்றி அணுக்கழிவு மையம் அமைகிறது என்றும் கூடங்குழம் நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Yuvaraj V | news18
Updated: June 14, 2019, 10:43 AM IST
அணுக்கழிவு மையத்தால் அபாயம் இல்லை...! கூடங்குளம் அணுமின் நிலையம் விளக்கம்
கூடங்குளம்
Yuvaraj V | news18
Updated: June 14, 2019, 10:43 AM IST
கூடங்குளத்தில் சேமிக்கப்படும் அணுக்கழிவுகளால் எந்தவித கதிர்வீச்சு அபாயமும் இல்லை என கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அணுமின் நிலையத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கூடங்குளத்தில் அமைக்கப்படும் அணுக்கழிவு மையத்தில், கூடங்குளம் அணு உலை ஒன்று மற்றும் இரண்டு ஆகியற்றில் இருந்து வெளியேறும் கழிவுகள் மட்டுமே சேமிக்கப்படும் என்றும், மற்ற அணுஉலை கழிவுகள் இங்கு கொண்டுவரப்படாது என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

கூடங்குளத்தில் அமையவுள்ளது போல இந்தியாவில் மேலும் இரண்டு இடங்களில் அணுக்கழிவு மையம் அமையவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் அணுக்கழிவுகளில் இருந்து எந்தவிதமான கதிர்வீச்சு அபாயமும் இல்லை என கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அணுக்கழிவு மையத்தால், சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நிலம் மற்றும் நீர் ஆகியவை மாசுபடாது எனவும் விளக்கமளிக்கப்பட்டது.

அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்றி, அதன் வழிகாட்டுதலின் அடிப்படையிலேயே அணுக்கழிவு மையம் அமைவதாகவும், இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும் கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமையவிருப்பதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே எதிர்ப்பு கிளம்பியது.

இதனைதொடர்ந்து, மக்களின் பயத்தை போக்கும் வண்ணம் தற்போது கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது அதில், அணுக்கழிவு மையத்தால் கதிர்வீச்சு அபாயம் இல்லை
Loading...
கூடங்குளம் 1 மற்றும் 2 அணு உலையில் இருந்து வெளியேறும் கழிவுகள் மட்டுமே சேமிக்கப்படும்- மற்ற அணுஉலை கழிவுகள் இங்கு கொண்டுவரப்படாது

கூடங்குளத்தில் அமையவுள்ளது போல இந்தியாவில் மேலும் 2 இடங்களில் அணுக்கழிவு மையங்கள் அமைய உள்ளன.  அணுக்கழிவுகளில் இருந்து எந்தவிதமான கதிர்வீச்சு அபாயமும் இல்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணுக்கழிவு மையத்தால் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நிலம் மற்றும் நீர் மாசுபடாது என்றும் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்றி அணுக்கழிவு மையம் அமைகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மக்களின் இயல்பு வாழ்க்கையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும் கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

Also see... 
First published: June 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...