ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்கத் தடையில்லை!- அப்போலோ வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு

21 மருத்துவர்கள் கொண்ட குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும் என அப்போலோ நிர்வாகம் கோரிக்கை வைத்திருந்தது.

Web Desk | news18
Updated: February 11, 2019, 12:01 PM IST
ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்கத் தடையில்லை!- அப்போலோ வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு
நீதிபதி ஆறுமுகசாமி
Web Desk | news18
Updated: February 11, 2019, 12:01 PM IST
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரிப்பதற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வருகிறது முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம். இதில், ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை குறித்து அப்போலோ மருத்துவமனை மீது ஆறுமுகசாமி ஆணையம் விசாரனை நடத்தத் தடை விதிக்க வேண்டும் என சில நாள்களுக்கு முன்னர் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், அப்போலோ மருத்துவர்களை விசாரிக்க வேண்டுமென்றால் 21 மருத்துவர்கள் கொண்ட குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும். அதுவரை ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக விசாரிக்க ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று அப்போலோ நிர்வாகம் சார்பில் கடந்த 9-ம் தேதி வழக்குத் தொடரப்பட்டது.

இதையடுத்து, இன்று விசாரணைக்கு வந்த வழக்கில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரிப்பதற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்தது. அப்போலோ மருத்துவமனையில் கோரிக்கையை நிராகரித்த உயர் நீதிமன்றம் விசாரணைக்குத் தடை ஏதும் இல்லை என உத்தரவிட்டது.

மேலும் பார்க்க: கூட்டணிக்காக அதிமுகவை மிரட்டும் பாஜக... ஸ்டாலின் பகீரங்க குற்றச்சாட்டு
First published: February 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...