Home » News » Tamil-nadu » NO QUOTA FOR IN SERVICE DOCTORS IN SUPER SPECIALITY COURSES MK STALIN STATEMENT RIZ

உயர்சிறப்பு மருத்துவக் கல்வியில் அரசு மருத்துவர்களுக்கு இடஒதுக்கீட்டு இல்லையென்று தீர்ப்பு... மத்திய, மாநில அரசுகளுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

பாஜக, அதிமுக அரசுகள் மருத்துவக் கனவுகளை பாழ்படுத்துவதாக மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

உயர்சிறப்பு மருத்துவக் கல்வியில் அரசு மருத்துவர்களுக்கு இடஒதுக்கீட்டு இல்லையென்று தீர்ப்பு... மத்திய, மாநில அரசுகளுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்
  • News18 Tamil
  • Last Updated: November 27, 2020, 10:37 PM IST
  • Share this:
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், ”தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவினைச் சிதைத்த பாஜக அரசு இப்போது அரசு மருத்துவர்களின் உயர்சிறப்பு மருத்துவக் (Super Speciality) கல்வி கனவினையும் பாழ்படுத்தியுள்ளது. அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று கடுமையாக வாதிட்டதின் காரணமாக இந்த ஆண்டு அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு அளிக்க உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாஜக அரசின் துரோகத்திற்குத் துணை போகும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு கலந்தாய்வை மேற்கொள்ளாமல் காலம் கடத்தியது. உரிய நேரத்தில் கலந்தாய்வு நடத்தி முடித்திருந்தால் அரசு மருத்துவர்களுக்கு உயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்தவுடன் இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும்.

போராடிப் பெற்ற சமூக நீதியின் பயன் அரசு மருத்துவர்களுக்கு கிடைக்காமல் போனதற்கு கூட்டணியாக துரோகம் செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் மத்திய பாஜக அரசுக்கும் கடும் கண்டனங்கள்’என்று குறிப்பிட்டுள்ளார்.






உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
First published: November 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading