• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னை கோயம்பேடு மேம்பாலம் வரும் 31-ம் தேதிக்குள் திறக்கப்படும்: அமைச்சர் எ.வ. வேலு

சென்னை கோயம்பேடு மேம்பாலம் வரும் 31-ம் தேதிக்குள் திறக்கப்படும்: அமைச்சர் எ.வ. வேலு

Youtube Video

கோயம்பேடு பேருந்துநிலையம் முன்பு கட்டப்பட்டுள்ள உயர்மட்ட சாலை மேம்பாலத்தை விரைந்து திறக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியிருந்தார்.

  • Share this:
    சென்னை வேளச்சேரியில் இரண்டாம் அடுக்கு மேம்பாலம் வரும் 31-ம் தேதி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

    கோயம்பேடு பேருந்துநிலையம் முன்பு கட்டப்பட்டுள்ள உயர்மட்ட சாலை மேம்பாலத்தை விரைந்து திறக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.
    இதற்கு பதிலளித்து அறிக்கை வெளியிட்டுள்ள அமைச்சர் எ.வ.வேலு, அதிமுக ஆட்சியில் உரிய காலத்திற்குள் கட்டுமான பணிகள் நிறைவடையாததால், திமுக ஆட்சிக்கு வந்ததும் இருமுறை தானே நேரடியாக சென்று பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களுக்கு ஆலோசனை வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார். எனவே, வரும் 31-ம் தேதிக்குள் கோயம்பேடு மேம்பாலம் திறக்கப்படும் என்றார்.

    இதேபோன்று, வேளச்சேரி இரண்டாம் அடுக்கு மேம்பாலம் இம்மாத இறுதியிலும், முதல் அடுக்கு மேம்பாலப் பணிகள் வரும் டிசம்பர் 31-க்குள்ளும் முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுரை வழங்கியதாகவும் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Elakiya J
    First published: