Home /News /tamil-nadu /

ஓராண்டு சாதனையை டிவில பாக்க கரண்ட் இல்ல: சீமான் கிண்டல்.. பதிலடி கொடுத்த செந்தில் பாலாஜி!

ஓராண்டு சாதனையை டிவில பாக்க கரண்ட் இல்ல: சீமான் கிண்டல்.. பதிலடி கொடுத்த செந்தில் பாலாஜி!

ஓராண்டு சாதனையை டிவில பாக்க கரண்ட் இல்ல: சீமான் ட்வீட்.. பதிலடி கொடுத்த செந்தில் பாலாஜி!

ஓராண்டு சாதனையை டிவில பாக்க கரண்ட் இல்ல: சீமான் ட்வீட்.. பதிலடி கொடுத்த செந்தில் பாலாஜி!

One year of dmk govt | அது தான் பெரியம்மா திராவிட மாடல்.. என சீமான் விமர்சித்துள்ளார்.

    திமுகவின் ஓராண்டு சாதனை குறித்து, நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டரில் கிண்டலாக விமர்சித்த நிலையில், அவருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார்.

    திமுக அரசு பொறுப்பேற்று நேற்றோடு ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், கடந்த ஒர் ஆண்டு ஆட்சிக்கு மக்கள் பலர் ஆதரவும், அதேநேரத்தில் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என திமுக மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

    அதிலும் மிக முக்கியமான தேர்தல் வாக்குறுதியாக பார்க்கப்பட்ட கூட்டுறவு நகைக் கடன் தள்ளுபடிக்கான அறிவிப்பு நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளியிடப்பட்டு அதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் அதிலும் முற்றிலுமாக தள்ளுபடி கிடைக்கவில்லை என்கிற சர்ச்சை எழுந்தது.

    தொடர்ந்து, திமுக வாக்குறுதிகளில் மிக முக்கியமான வாக்குறுதியாக பார்க்கப்பட்டது தமிழ்நாட்டிலுள்ள மகளிருக்கான மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்கிற அறிவிப்பு, இந்த தேர்தல் வாக்குறுதி எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என கடந்த ஓராண்டில் தமிழ்நாடு மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. எதிர்க் கட்சிகளும் கடந்த ஓராண்டில் இந்த தேர்தல் வாக்குறுதியை எப்போது அரசு நிறைவேற்றும் என பலமுறை கேள்வி எழுப்பியது எனினும், அத்திட்டம் செயல்படுத்தப்படாதது சர்ச்சையாக பார்க்கப்படுகிறது.

    இவை அனைத்திற்கு மேலாக திமுக ஆட்சி என்றாலே மின்வெட்டு ஏற்படும் என மக்கள் மத்தியில் ஏற்கனவே பெரும் அச்சம் இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின்வெட்டு ஏற்பட்டது. பல இடங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டது. இதற்கு திமுக தரப்பில் பல்வேறு விளக்கங்கள் கொடுக்கப்பட்டாலும் மக்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் எழுந்தன.



    இந்நிலையில், மின்வெட்டு சம்பவத்தை குறிப்பிட்டு திமுகவின் ஓர் ஆண்டு ஆட்சி சாதனை என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கிண்டலாக விமர்சித்துள்ளார்.

    இதுதொடர்பாக சீமான் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, ஏப்பா சீமான்.. இந்த ஆட்சியின் ஒரு ஆண்டு சாதனையை டிவில போடுறாங்கலாம்.. அது என்னனு பார்க்கலாம்னு பாத்தா எழவு கரண்ட் இல்லப்பா.. அது தான் பெரியம்மா திராவிட மாடல்..! என்று அவர் தெரிவித்திருந்தார்.


    சீமானின் இந்த பதிவிற்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, கடும் கோடையிலும் உச்சபட்ச மின் தேவை இருந்த போதும் தமிழ்நாடு மின் வாரியம் மிகச் சிறப்பாகக் கையாண்டு வருகிறது. அண்ணன் சமீபத்தில் குடியேறி இருக்கும் கடற்கரையோர சொகுசு பங்களாவின் மின் இணைப்பு எண்ணைக் கொடுத்தால் அங்கு 'உண்மையிலேயே’ மின் வெட்டு இருந்ததா என்பதை விசாரித்துச் சொல்கிறேன் என்று சீமானை குறிப்பிட்டு அவர் கூறியுள்ளார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: DMK, MK Stalin, Seeman, Senthil Balaji

    அடுத்த செய்தி