• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அரசு மருத்துவமனையில் மின்வெட்டு: செல்போன் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்!

அரசு மருத்துவமனையில் மின்வெட்டு: செல்போன் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்!

அரசு மருத்துவமனை

அரசு மருத்துவமனை

சிவகங்கையிலும் இந்த மின்வெட்டுநிலை தொடர்ந்தால், மதுரை அரசு மருத்துவமனையில் ஏற்பட்டதை போன்று உயிர்சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று நோயாளிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
மதுரை அரசு மருத்துவமனையில் ஜென்ரேட்டர் பழுதாகி, மின்சாரம் நின்று போனதால், 5 பேர் உயிரிழந்தச் சம்பவம் மறைவதற்குள், சிவகங்கை அரசு மருத்துவமனையில் 3 மணிநேரம் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் செல்போன் வெளிச்சத்தில் அறுவைச் சிகிச்சை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு, தினம் தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்லுகின்றனர். சுமார் 700 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனையில், உள்நோயாளிகள் 300-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு 7 மணிக்கு மருத்துவமனையில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து 3 மணிநேரம் ஆகியும் மின்சாரம் வராததால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவசரச் சிகிச்சை நோயாளிகளுக்கு செல்போன் வெளிச்சத்தைப் பயன்படுத்தி மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை செய்தனர்.

தொடர்ந்து மின்சாரம் வராததால் ஆபத்தை உணர்ந்த மருத்துவர்கள், விபத்து ஏற்பட்டு சிகிச்சைக்கு வந்தவரை மதுரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படும் பணியாளர்களுக்கு, மின்வெட்டைச் சரி செய்யும் அளவிற்கு அனுபவம் இல்லாதவர்கள் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதே நிலை நீடித்தால் மதுரை அரசு மருத்துவமனையில் ஏற்பட்டதைப் போன்று உயிர்சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் நோயாளிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

Also see... பைனான்சியர் கொலையில் திருப்பம்... மகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு மனைவி கூலிப்படை வைத்து கொன்றது அம்பலம்

Also see...




உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





Also see...




அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: