வாக்கு எந்திரத்தில் அமமுக வேட்பாளருக்கு பட்டன் இல்லாததால் வாக்குப்பதிவு நிறுத்தம்!

தமிழகத்தில் வேலூர் நீங்கலாக 38 மக்களவை தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது

வாக்கு எந்திரத்தில் அமமுக வேட்பாளருக்கு பட்டன் இல்லாததால் வாக்குப்பதிவு நிறுத்தம்!
அமமுக வேட்பாளரின் பெயருக்கு நேராக பட்டன் இயங்கவில்லை
  • News18
  • Last Updated: April 18, 2019, 2:43 PM IST
  • Share this:
கடலூர் தொகுதிக்கு உள்பட்ட திருவதிகை வாக்குச்சாவடியில் இருக்கும் வாக்கு எந்திரத்தில் அமமுக வேட்பாளரின் பெயருக்கான பட்டன் இல்லாததால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வேலூர் நீங்களாக 38 மக்களவை தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. மேலும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடக்கிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு அமைதியாக நடந்து வருகிறது.

அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் ஆர்வமாக வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.


பிற்பகல் 1 மணி வரை 39 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில், கடலூர் தொகுதிக்கு உள்பட்ட திருவதிகை வாக்குச்சாவடியில் இருக்கும் வாக்கு எந்திரத்தில் பரிசுப்பெட்டி சின்னத்தில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் காசி. தங்கவேல் பெயருக்கு நேரான பட்டன் இல்லை.

இதனால், வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் மாற்று எந்திரம் பொறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

First published: April 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்