முகப்பு /செய்தி /தமிழ்நாடு / எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து கூறியதன் பின்னணி என்ன..? திருமாவளவன் பேட்டி..!

எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து கூறியதன் பின்னணி என்ன..? திருமாவளவன் பேட்டி..!

திருமாவளவன்

திருமாவளவன்

அதிமுகவின் கூட்டணி கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவிக்கும் முன்னே இபிஎஸ்ஸுக்கு திருமாவளவன் வாழ்த்து தெரிவித்தது முக்கியமானதாக பார்க்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், அதிமுக எடப்பாடி பழனிசாமி வசமானது. அவருக்கு உடனடியாக வாழ்த்து தெரிவித்த விசிக தலைவர் திருமாவளவன், அதிமுகவின் பொதுச்செயலாளராக உறுதிப்பட்டிருப்பது அவரது வலுவான ஆளுமைக்குச் சான்றாக உள்ளது என்றும் குறிப்பிட்டார். அதிமுகவின் கூட்டணி கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவிக்கும் முன்னே திருமாவளவன் வாழ்த்து தெரிவித்தது முக்கியமானதாக பார்க்கப்பட்டது.

இதுதொடர்பாக வணக்கம் தமிழ்நாடு நிகழ்ச்சியில் சிறப்பு பேட்டியளித்தார் விசிக தலைவர் திருமாவளவன். அப்போது, “எடப்பாடி பழனிசாமியை பாராட்டியதில் எந்த அரசியல் கணக்கும் இல்லை. அவர் அடிமட்டத்திலிருந்து தலைமைக்கு உயர்ந்திருப்பது பாராட்டுக்குரியது. ஓபிஎஸ்ஸை பின்னுக்குத் தள்ளி தனது இடத்தை தக்கவைத்துள்ளார். தனது ஆளுமையை நிரூபித்திருக்கிறார். பா.ஜ.க ஆதரவுக்காகக் காத்திருக்காமல் வேட்பாளரை அறிவித்தார் இபிஎஸ்” என்று குறிப்பிட்டார்.

மேலும், திமுக கூட்டணியை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை என்று குறிப்பிட்ட திருமாவளவன், “கூட்டணிக் கட்சிகளை நீர்த்துப்போகச் செய்வது பாஜகவின் வழக்கம். பாஜகவுடன் இருப்பது அதிமுகவுக்குதான் பலவீனம். இபிஎஸ்ஸுக்கு வாழ்த்துவது என்பதை விட முன்னெச்சரிக்கை விடுத்தேன்” என்றும் கூறினார். திமுக கூட்டணி தேசிய அளவில் விரிவடைய வேண்டும் எனவும் பாஜக எதிர்ப்பு நிலையில் உள்ள கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

First published:

Tags: AIADMK, Edappadi Palaniswami, Thol. Thirumavalavan