Home /News /tamil-nadu /

இந்தியாவில் ரயில் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் இல்லை: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

இந்தியாவில் ரயில் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் இல்லை: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

இந்தியாவில் ரயில் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் இல்லை என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

ரயில் வழித்தடங்களில் யானைகள் இறப்பு விகிதம் அதிகரித்து இருப்பது கவலை அளிக்கக் கூடிய ஒரு விஷயம் என்றாலும் கூட அதை தடுப்பதற்கு இந்திய ரயில்வே பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது விரைவில் துறையுடன் இணைந்து யானைகள் செல்லும் பாதையை இடை மறைக்காமல் சுலபமாக யானைகள் செல்ல ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளோம் என ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் அடுத்த தலைமுறைக்கான போக்குவரத்து மாற்றத்திற்காக ஹைப்பர் லூப் திட்டத்தை வடிவமைத்து உள்ளனர். மேலும் 5ஜி சேவைக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை மத்திய ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டு திட்டத்தை வடிவமைத்த மாணவர்களுடன் கலந்துரையாடினர்.

பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், யானைகள் ஒருமுறை கடந்த பாதையை நீண்ட நாட்கள் ஞாபகம் வைத்து அதே பாதையை பயன்படுத்துகிறது. யானைகள் தண்டவாளங்களை கடக்கும் இடங்களை கண்டறிந்து அந்த இடங்களில் தண்டவாளங்கள் உயர்த்தப்பட்டு யானைகள் செல்வதற்கு சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட உள்ளது. விரைவில் அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது.

ALSO READ | செருப்பைத் தலையில் தூக்கிக் கொண்டு இருந்த சமுதாயத்தை மேயராக்கியவர் முதல்வர் ஸ்டாலின் - லியோனி சர்ச்சை பேச்சு

தமிழகத்தில்  சென்னை எழும்பூர், காட்பாடி, மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி உள்ளிட்ட ரயில் நிலையங்கள் முழுவதுமாக 760 கோடி செலவில் புணரமைக்கப்பட உள்ளது.

தெற்கு ரயில்வேக்கு குறைந்த நிதி ஒதுக்கப்பட்டது என்ற தகவல் தவறானது. ரூ.3,861 கோடி தமிழக ரயில்வேக்காக ஒதுக்கப் பட்டுள்ளது.

சென்னை ஐஐடி மாணவர்களுக்கு ஹைப்பர் லூப் திட்டத்திற்கு ரூ.8.5 கோடி மத்திய ரயில்வே சார்பில்  வழங்கப்பட்டுள்ளது. புறநகர் ரயில்களில் ஏசி பெட்டிகளில் பயன்படுத்துவது சாத்தியமானதுதான்.
வரும் காலங்களில் ரயில் கட்டணங்கள் உயர்த்துவதற்கு வாய்ப்பில்லை.

பல ஆண்டுகளாக ரயில் கட்டணம் ஒரே நிலையில் உள்ளது.
ஆனால், சீனியர் சிட்டிசனுக்கு வழங்கப்பட்டு வந்த 50% கட்டண சலுகை இனி தொடர வாய்ப்பில்லை என்றார். கொரோனா காலத்தில் இருந்து நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது நீடிக்க வாய்ப்பு இல்லை என கூறினார்.
Published by:Esakki Raja
First published:

Tags: Southern railway

அடுத்த செய்தி