Home /News /tamil-nadu /

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் காணொலி காட்சி விசாரணை நிறுத்தம்...!

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் காணொலி காட்சி விசாரணை நிறுத்தம்...!

சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் கொரோனா பரவலை அடுத்து கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் சென்னை உயர்நீதிமன்றம் உள்பட மாநிலத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் ஆன்லைன் மூலமாக மட்டுமே வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்தது.

  • News18
  • Last Updated :
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் ஜனவரி 3 ஆம் தேதி முதல் ஆன்லைன் விசாரணை முறை நிறுத்தப்பட்டு நேரடியாக மட்டுமே வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என உயர் நீதிமன்ற பதிவுத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை அடுத்து கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் சென்னை உயர்நீதிமன்றம் உள்பட மாநிலத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் ஆன்லைன் மூலமாக மட்டுமே வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்தது. அதன்பின்னர், தொற்று பரவல் குறைந்ததை அடுத்து, படிப்படியாக, நேரிடை விசாரணை முறைக்கு மாற்றப்பட்டது.

இருப்பினும், வழக்கறிஞர்களின் தேவைகளை பொறுத்து, உயர்நீதிமன்றத்தில் குறிப்பிட்ட வழக்குகள் ஆன்லைன் மூலமாகவும் விசாரிக்கப்பட்டு வந்தது.

Also read... தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு...!

இந்த நிலையில், 2022 ஜனவரி 3 ஆம் தேதி முதல், சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றங்களில் ஆன்லைன் விசாரணை முறை நிறுத்தி வைக்கப்படுவதாக நீதித்துறை நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also read... ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 51 பேருக்கு எஸ் ஜீன் மாற்றம்!

ஜனவரி 3 ஆம் தேதி முதல் நேரிடையாக மட்டுமே வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Madras High court, Madurai High Court

அடுத்த செய்தி