பிரதமரின் கிசான் திட்டம் தொடர்பாக அதிமுக, திமுக, காங்கிரஸ் சார்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அப்போது பேசிய திமுக உறுப்பினர் பொன்முடி, கிசான் திட்டம் மத்திய அரசின் திட்டமாக இருந்தாலும் பெருபான்மையான பங்கை மாநில அரசு தான் ஏற்றுள்ளது. இத்திட்டத்தின் முறைகேடு குறித்து வேளாண் துறை செயலாளரே 110 கோடி முறைகேடு நடத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
Also read: உழவர் உதவி நிதி திட்டத்தில் நடைபெற்ற ஊழலுக்கு தமிழக அரசே பொறுப்பு - தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.,
இதுவரை ஒப்பந்த ஊழியர்கள் தான் கைது செய்யப்படுகிறார்கள். இவ்வளவு பெரிய முறைகேடு நடந்து இருப்பதால், இதில் ஆளும் கட்சி ஆதரவு இருக்குமோ என்ற அச்சம் இருக்கிறது. எனவே சிபிசிஐடி விசாரணை வேண்டாம் என்று தெரிவித்தார். அதோடு சிபிஐ விசாரணைக்கு முதலமைச்சர் உத்தரவிடவேண்டும் என்று வலியுறுத்தினார்.
காங்கிரஸ் சார்பாக பேசிய சட்டமன்ற உறுப்பினர் ராமசாமி, விவசாயிகளை காப்பாற்ற வேண்டிய அரசு, விவசாயிகளுக்கு மிகப்பெரிய தீங்கு விளைந்திருக்கிறது என்று குற்றம் சாட்டினார். குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட இடைத்தரகர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு, ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை அதிக பதிவுகள் மேற்கொள்ளப்பட்டது. இதுவரை இந்த திட்டம் மூலம் 4365.67 கோடி ரூபாய் நிதி உதவி 6 தவணைகளாக வழங்கப்பட்டுள்ளது. புகார் பெறப்பட்டதன் தகவல் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 13 மாவட்டத்தில் முறைகேடுகள் நடைப்பெற்றது கண்டறியப்பட்டது என்று தெரிவித்தார். எனவே மறு உத்தரவு வரும் வரை புதிய பதிவுகளை அனுமதிக்க வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
தனியார் கம்பியூட்டர் சென்டர்கள் , இடைத்தரகர்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. விசாரணை அனைத்து மாவட்டத்திலும் விரைவாக நடைப்பெற்று வருகிறது. இத்திட்டத்தில் தவறு இழைத்த ஒருவரும் தப்பிக்க முடியாது என்றும் அமைச்சர் துரைக்கண்ணு உறுதிப்பட தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.