தமிழகத்தில் ஒருவருக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் ஒருவருக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

3ம் அலையை பொறுத்தவரை இங்கிலாந்து போன்ற நாடுகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 3ம் அலையில் இறப்பை பொறுத்தவரை அங்கு குறைவாகவே உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

  • Share this:
தமிழகத்தில் தடுப்பூசி தயாரிப்பு மையத்தை துவங்க வேண்டும் என்ற கோரிக்கை பரிசீரிக்கப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்ததாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை அசோக் நகர் தனியார் பள்ளியில் முடி திருத்துபவர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்திற்கு 1.77 கோடி தடுப்பூசிகள் கிடைத்துள்ளது. இதில் இன்று காலை நிலவரப்படி 7,77,910 தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதே போன்று, டெல்லி பயணத்தின் பொழுது, தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துவதற்கான விழிப்புணர்வு மிக சிறப்பாக நடைபெற்றது வருகிறது என பிரதமர் பாராட்டியதாகவும், தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசி தாராளமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிப்பு மையம் துவங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை பரிசீலிப்போம் என தெரிவித்ததாக கூறினார். தமிழகத்தில் புதிதாக அமைய உள்ள 11 மருத்துவ கல்லூரிகளில் 1,600 இடங்களுக்கான  சேர்க்கையை தொடங்க வேண்டும், கரும்பூஞ்சை நோயால் தமிழகத்தில் 4ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Also read: ’ஷாக் அடிக்கும் மின் கட்டணம்’ - 3 மடங்கு வரை உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் புகார்!!

இதற்காக தமிழகம் முழுவதும் 7ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. சென்னையில் மட்டும் 500 படுக்கைகள் உள்ளதாகவும் கூறிய அவர், கருப்பு பூஞ்சை நோய்க்கு மருந்து வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கரும்பூஞ்சை பாதிப்பை துவக்க நிலையில் கண்டறிந்தால் விரைவில் குணப்படுத்த முடியும். இல்லையெனில், கண்பார்வை பரிபோதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும் என்றார்.

மேலும், எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைந்து துவங்க வேண்டும் என 13 கோரிக்கைகள் வைக்கப்பட்டது. கோரிக்கை மனுக்கள் அனைத்தையும் பரிசீலித்து விரைவில் பதில் கூறுவதாக தெரிவித்தனர். 3ம் அலையை பொறுத்தவரை இங்கிலாந்து போன்ற நாடுகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also read: மயிலாடுதுறை அருகே வேளாண் கூட்டுறவு சங்க செயலாளர் எரிந்த நிலையில் மர்ம மரணம்.. போலீசார் விசாரணை!

3ம் அலையில் இறப்பை பொறுத்தவரை அங்கு குறைவாகவே உள்ளது. அங்கு அவர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டதால் தான் இறப்பு குறைந்துள்ளது. எனவே நாம் தடுப்பூசியை முழுமையாக போட்டுக்கொள்ள வேண்டும். 3ம் அலையை எதிர்கொள்ள தமிழகத்தில் அணைத்து கட்டமைப்புகளும் தயார் நிலையில் உள்ளது.

ஜிகாவை பொறுத்தவரை ஒருவருக்கு கூட தமிழகத்தில் இல்லை. கேரளாவில் 22 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
Published by:Esakki Raja
First published: