‘தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவால் அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது’ என்று நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் 2-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, மெரினா கடற்கரையிலுள்ள அவரது நினைவிடத்தில் நடிகர் விஷால் இன்று அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜெயலலிதாவின் பெயரை கெடுக்க கூடாது. அவரது மறைவால் அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அதை யாராலும் நிரப்ப முடியாது.
தமிழகத்தில் 20 தொகுதிகளுக்கு தேர்தல் வருமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஆர்.கே.நகர் தேர்தலில் எனது வேட்பு மனுவை நிராகரித்தார்கள். திருப்பரங்குன்றம் தேர்தலை தள்ளி வைத்துள்ள நிலையில், நான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து 20 தொகுதி தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு சொன்னால் தான் சரியாக இருக்கும்.
நான் அரசியலுக்கு வர வேண்டாம் என்ற எண்ணம்தான் என்னுள் உள்ளது. ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு. அரசியலுக்கு வர வேண்டும் என்ற சூழலை உருவாக்கி அந்த நிலைக்கு தள்ளப்படும்போது தான், அதற்கு எதிர்வினையாற்ற வேண்டியுள்ளது. நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் போன்றவர்கள் அரசியலுக்கு வருவது ஆரோக்கியமானது என்றார் விஷால்.
Also watch
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor vishal, Jayalalithaa