ஒன்றுபட்டு நின்றால் நம்மை யாரும் வீழ்த்த முடியாது - மேகதாது விவகாரத்தில் துரைமுருகன் உறுதி!

அமைச்சர் துரைமுருகன்

மேகதாது விவகாரத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒன்றுபட்டு இறுதிவரை நின்றால் நம்மை யாரும் வீழ்த்த முடியாது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
மேகதாது விவாகரம் தொடர்பாக கட்சி தலைவர்கள் பேரவையில் எழுப்பிய கேள்விகளுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்து பேசினார். அப்போது, கட்சி வித்தியாசம் இல்லாமல் ஒரு நிலையில் நின்று இருக்கிறோம். இப்போது எப்படி நிற்கிறோமோ இறுதி வரை அப்படியே நின்றால் நாம் நிச்சியம் வெற்றி பேறுவோம் என்கிற உறுதியை தருகிறேன் என்று தெரிவித்தார்.

யார் ஆட்சிக்கு வந்தாலும் கர்நாடக கேரளாவில் ஒரே மாதிரி தான் பேசுவார், எவ்வித வித்தியாசமும் இருக்காது. ஆனால் தமிழகத்தில் அப்படி இல்லை. தற்போது தமிழகத்தில் வித்தியாசம் மறைந்து போய்விட்டது.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இருமொழி கொள்கை, நீட் குறித்து தெரிவித்தது போல நாம் ஒன்றுபட்டு நின்றால் எந்த சக்தியும் நம்மை வீழ்த்தமுடியாது என்றும் துரைமுருகன் தெரிவித்தார்.

Also read: வாரத்திற்கு 6 நாட்கள் பள்ளிகள் இயங்கும்: செப்.1 முதல் தமிழக பள்ளிகளில் புதிய விதிமுறைகள்!

மேகதாதுவில் அணைகட்டுவதை தடுத்து நிறுத்துவது தொடர்பாக முதலமைச்சர் பிரதமரை சந்தித்து பேசினார். கடிதமும் எழுதினார். மேலும், அனைத்து கட்சி பிரதிநிதிகளும் நீர் வளத்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தினோம் என்றார். அப்போது தமிழ்நாடு, பாண்டிசேரி கேரளா அரசின் ஒப்புதலோடு வந்தால் தான் அனுமதி தருவோம் என்று ஒன்றிய அமைச்சர் தெரிவித்தார்.

ஆனால், டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேகதாது விவகாரம் விவாதிக்கப்படும் என்று சொல்வது அதிர்ச்சி அளிக்ககூடியது. இதை பற்றி பேச முகாத்திரம் கிடையாது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது, காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேகதாது குறித்து பேச கூடாது.

தமிழகத்தின் முடிவில் உறுதியாகவுள்ளோம். இது குறித்துகூட்டத்தில் வலியுறுத்துவோம் என்று துரைமுருகன் உறுதியாக தெரிவித்தார். கர்நாடக முதலமைச்சர் நீதி தவறமாட்டார் என்ற நம்பிக்கையுள்ளது. மறுக்க வேண்டியதை மறுப்போம் வாதட வேண்டியதை வாதாடுவோம் என்றும் துரைமுருகன் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Esakki Raja
First published: