Home /News /tamil-nadu /

7 பேரை விடுதலை செய்வதில் ஆட்சேபணை இல்லை - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

7 பேரை விடுதலை செய்வதில் ஆட்சேபணை இல்லை - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

பேரறிவாளன் உட்பட 7 பேரும் குற்றவாளிகள் அல்ல என்ற கருத்து நிலவி வருவதால் அவர்களை விடுதலை செய்வதில் எந்த ஆட்சேபணையும் இல்லை என தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

    ராஜீவ் கொலை குற்றவாளிகள் மீதான குற்றச்சாட்டு பொய்யானது என கருத்து நிலவிவரும் வேளையில் அவர்களை விடுதலை செய்வது தவறு ஏதும் இல்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.

    ஈரோடு கருங்கல்பாளையத்தில் காந்தி சிலை அமைத்து 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குஷ்பு பிஜேபிக்கு சென்றதைப் பற்றி கவலைப்படவில்லை; எங்கிருந்தாலும் வாழ்க என்றார். மேலும், தமிழகத்தில் பாரதிய ஜனதாவினர் வேல் யாத்திரை மட்டுமின்றி என்ன குட்டிக்கரணம் போட்டாலும் தமிழக மக்கள் பாரதிய ஜனதா கட்சியை எப்போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றார்.

    Also read: எனது தந்தை தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் தொடர்பில்லை - நடிகர் விஜய்



    தொடர்ந்து பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரும் குற்றவாளிகள் இல்லை என்ற பொதுவான கருத்து பரவி வரும் நிலையில், அந்த கருத்து உண்மை என்றால் அவர்களை விடுதலை செய்வதில் ஆட்சேபம் ஏதுமில்லை என்றும், எனினும் சட்டம் என்ன சொல்கிறதோ அதை ஏற்றுக்கொள்வோம் என்றார்.

    மேலும் திருமாவளவன் கூறிய கருத்தில் எந்த விதமான தவறும் இல்லை என்றும் அது 100% உண்மை என்றும் , வேண்டுமென்றே சிலர் காழ்ப்புணர்ச்சி காரணமாக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்றார். திமுகவுடன் கூட்டணி என்பது தேர்தலுக்காக அல்ல என்றும் கொள்கையுடனான கூட்டணி என்றும், தேர்தலில் காங்கிரஸிற்கு குறைவான இடங்களே தருவார்கள் என்று சொல்வது கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சி என்றும், தொடர்ந்து பாஜகவை எதிர்ப்போம் என்றும் தெரிவித்தார்.
    Published by:Rizwan
    First published:

    Tags: EVKS Elangovan, Perarivalan

    அடுத்த செய்தி