• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • துரை வைகோ கட்சிக்கு வருவதில் தவறில்லை, ஆனால்..? மதிமுகவில் இருந்து விலகிய ஈஸ்வரன் ஆதங்கம்

துரை வைகோ கட்சிக்கு வருவதில் தவறில்லை, ஆனால்..? மதிமுகவில் இருந்து விலகிய ஈஸ்வரன் ஆதங்கம்

மதிமுகவில் இருந்து விலகிய ஈஸ்வரன் ஆதங்கம்

மதிமுகவில் இருந்து விலகிய ஈஸ்வரன் ஆதங்கம்

துரைவைகோவை எல்லாரும் மனப்பூர்வமாக  ஏற்றுக்கொண்டனர் என சொல்ல முடியாது என்றுள்ளார் ஈஸ்வரன்.

  • Share this:
துரை வைகோ கட்சிக்கு வருவதில் தவறில்லை, ஆனால் அவர் மட்டுமே கட்சியை வழிநடத்த முடியும் , அவரை தவிர இந்த இயக்கத்தில் வேறு யாருக்கும் தகுதியில்லை என்பதை ஏற்க முடியாது எனவும், அப்படிப்பட்ட எண்ணம் உருவானதே தவறானது எனவும் மதிமுகவில் இருந்து விலகிய ஈஸ்வரன் தெரிவித்தார்.

மதிமுகவின் மாநில இளைரணி செயலாளராக இருந்தவர் ஈஸ்வரன். இவர் இன்று தனது கட்சியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மதிமுக  கட்சியின் தலைமை கழக பொறுப்பில் வைகோவின் மகன் துரை வைகோ நியமனம் செய்யப்பட்ட நிலையில் ஈஸ்வரன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் . இந்நிலையில் தனது ராஜினாமா குறித்து மதிமுகவில் இருந்து விலகிய ஈஸ்வரன் பேட்டியளித்தார்.

அதில், வைகோ மீதான ஈர்ப்பில் இயக்கத்திற்கு வந்தேன் எனவும், தற்போது பொதுசெயலாளரை மீறி கட்சி செல்வது வேதனை ஏற்படுத்தியதால் கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.பெரும்பான்மையோர் கருத்துடன் ஒத்துப்போக முடியவில்லை என்பதால் இயக்கத்தை விட்டு வெளியேறுகின்றேன் என்றார்.

துரை வைகோ கட்சிக்கு வருவதில் தவறில்லை, ஆனால் அவர் மட்டுமே கட்சியை வழிநடத்த முடியும் , அவரை தவிர இந்த இயக்கத்தில் வேறு யாருக்கும் தகுதியில்லை என்பதை ஏற்க முடியாது எனவும்  அப்படிப்பட்ட எண்ணம் உருவானதே தவறானது என தெரிவித்தார். வாரிசுதான் கட்சியை நடத்த முடியும் என்ற மனோநிலை இப்போது எல்லா கட்சியிலும் இருந்து வருகின்றது.

பதவிக்காகவும், வாய்ப்புக்காவும்  பலர் இந்த வாரிசு அரசியலை எதிர்ப்பதில்லை. கட்சியின் பொது செயலாளர் விரும்பாத ஒரு விஷயத்தை அனைத்து மாவட்டங்களிலும் தீர்மானமாக நிறைவேற்றுகின்றனர் என்றால் கட்சி சிறப்பாக செயல்படுகிறது என்று எப்படி எடுத்துக் கொள்ள முடியும் ? என கேள்வி எழுப்பினார். கட்சி தனது  கட்டுப்பாட்டில் இல்லை என வைகோவே தெரிவிக்கின்றார்.

துரைவைகோவை எல்லாரும் மனப்பூர்வமாக  ஏற்றுக்கொண்டனர் என சொல்ல முடியாது. வாரிசு வந்தால்தான் கட்சியை நடத்த முடியும் என்ற மனநிலை கட்சியினரிடம் இருக்கின்றது. எல்லோருக்கும் தகுதி இருக்கின்றது, ஆனால் அவர் மகனுக்கு மட்டும் தகுதியிருக்கின்றது என்பது சரியல்ல. கட்சியில் அடுத்த நல்ல வாய்ப்பு இருக்கு,  துரை வைகோவை ஏற்று ஆதரிக்க வேண்டும் என பலர் சொன்னார்கள். ஆனால் ஆரம்பத்தில் இருந்தே நான்  எதிர்த்து வருகின்றேன். சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பு கிடைக்கும் சூழல் ஏற்பட்ட போது "தம்பி"யிடம் பேசுங்கள் என்று கட்சியின் மூத்த நிர்வாகியே சொன்னார்.

நான் தம்பியிடம் பேசவில்லை என தெரிவித்த அவர், மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் என்ற புதிய இயக்கத்தை துவங்குகின்றேன், இது அரசியல் கட்சி அல்ல.அரசியலுக்குள் இருந்து செய்ய முடியாத விடயங்களை இந்த இயக்கம் மூலம் செய்ய இருக்கின்றேன் எனவும் ஈஸ்வரன்  தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: