2022 ஆம் ஆண்டு இன்றுடன் விடை பெறும் நிலையில், புத்தாண்டை கொண்டாட மக்கள் உற்சாகமாக தயாராகி வருகின்றனர். கொரோனா பரவல் சற்றே அதிகரிக்கும் நிலையில் அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சென்னை மாநகரில் பாதுகாப்புக்காக 16 ஆயிரம் காவலர்களும், ஆயிரத்து 500 ஊர்காவல் படையினரும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். சென்னை மெரினாவில் மணல் பகுதிக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணி முதல் இரவு 1 மணி வரை மட்டுமே கொண்டாட்டங்களுக்கு அனுமதி என கூறியுள்ள நிலையில் இரவிலும் ட்ரோன் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்துள்ளது.
நட்சத்திர விடுதிகளில் ஆபாச நடனங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. நீச்சல் குளங்களை மூடவும், மதுகூடங்களை அனுமதித்த இடங்களில் மட்டுமே நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனத்தை இயக்குவோரின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின் சாலைகளில் பல இடங்களில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்படுகின்றன. வாகன ஓட்டிகள் கவனிக்கும் வகையில் அவைகளில் ஒளிரூட்டும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுகின்றன.
கோவை மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் ஏராளமான ரிசார்ட்டுகள் மற்றும் கேளிக்கை விடுதிகள் உள்ள நிலையில் வனத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.அதிக ஒலி எழுப்பும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தக்கூடாது, அதிக ஒளி உமிழும் விளக்குகளை உபயோகிக்கக்கூடாது. மேலும்,
Camp Fire பயன்படுத்த கூடாது, வனப்பகுதிக்கு ஆபத்து விளைவிக்கும் எந்தவொரு செயலிலும் ஈடுபடக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல மாநிலம் முழுவதும் சுற்றுலாத் தலங்களில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: New Year 2023