வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டால் யாருக்கும் பாதிப்பில்லை: தமிழக அரசு வாதம்

வன்னியர் இடஒதுக்கீடு

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது தொடர்பான அரசாணைக்கு தடை விதிக்க அவசியமில்லை என தமிழக அரசுத்தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

 • Share this:
  தமிழகத்தில் கல்வி, வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி கடந்த ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தை எதிர்த்து பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு சில மணி நேரத்துக்கு முன் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், பிற சமுதாயத்தினர் இதனால் பாதிக்கப்படுவர் எனவும் அந்த மனுக்களில் கூறப்பட்டிருந்தன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த வழக்குகளுக்கான விசாரணை அடுத்த மாதம் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த சட்டத்தை நடப்பு கல்வியாண்டு முதல் அமல்படுத்த இருப்பதாக தமிழக அரசு நேற்று அரசாணை பிறப்பித்துள்ளது.

  இதையடுத்து, இந்த வழக்கை அவசர வழக்காக முன் கூட்டியே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில், தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் முறையிடப்பட்டது.

  மேலும் படிக்க: தமிழக அரசின் விருதை ஏற்கிறேன், ரூ.10 லட்சம் பரிசுத் தொகை மக்களுக்கு போகட்டும் - சங்கரய்யா!


  அப்போது, சட்டத்துக்கு தடை கோரிய வழக்கை விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் எனவும் சட்டத்தை அமல்படுத்தினால் விளிம்பு நிலை மக்கள் பாதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று, பிற்பகல் இதுசம்பந்தமாக விளக்கமளிக்க அரசுத்தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

  அதன்படி, தலைமை நீதிபதி அமர்வில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி கடந்த பிப்ரவரி மாதம் சட்டம் இயற்றப்பட்டதாக தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, இந்த அரசாணைக்கு ஏன் தடை விதிக்க கூடாது என கேள்வி எழுப்பினார்.

  இதையும் படிங்க: நீட் தேர்வு அடிப்படையில் எம்.பி.பி.எஸ் சேர்ந்தவர்கள் குறைந்த மதிப்பெண்களே பெறுகின்றனர் - ஏ.கே.ராஜன் குழு உறுப்பினர் தகவல்!


  அதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர், இந்த சட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் 28 வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும், உச்ச நீதிமன்றத்திலும் நான்கு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம், கடந்த ஏப்ரல் மாதமே இச்சட்டத்தை அமல்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

  மேலும், இந்த சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்பதால், அரசாணைக்கு தடை விதிக்க அவசியமில்லை என அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்குகளை ஆகஸ்ட் 2 வது வாரத்தில் விசாரணைக்கு பட்டியலிட தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
  Published by:Murugesh M
  First published: