மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் - மெட்ரோ ரயில் நிர்வாகம்

இன்று முதல் சேவையை தொடங்கிய வண்ணாரப்பேட்டை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ கட்டணம் ரூ.40 -ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

news18
Updated: February 10, 2019, 7:26 PM IST
மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் - மெட்ரோ ரயில் நிர்வாகம்
மெட்ரோ ரயில்
news18
Updated: February 10, 2019, 7:26 PM IST
சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணிகள் இன்றும் நாளையும் கட்டணமின்றி இலவசமாக பயணிக்கலாம் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

வண்ணாரப்பேட்டை - டிஎம்எஸ் இடையிலான 10 கிலோ மீட்டர் வழித்தடத்தை பிரதமர் மோடி திருப்பூரில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதன் மூலம் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதற்கட்டம் முழுமையாக பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயிலின் முதல் கட்டம் முழுமையடைந்தையொட்டி, பயணிகளுக்கு சிறப்புச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மெட்ரோ ரயிலின் அனைத்து வழித்தடங்களிலும் பயணிகள் இன்றும் நாளையும் கட்டணமின்றி இலவசமாக பயணிக்கலாம். பயணிகளின் வருகையை அதிகரிக்க சோதனை முயற்சியாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் குறித்து மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ‘தமிழ்நாடு அரசிடம் இருந்து சில நாட்களுக்கு முன்பு தான் இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்திற்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. எப்போது அனுமதி அளிக்கபடும் என உறுதியாகக் கூற முடியாது. ஆனால் இரண்டாம் கட்டத் திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பரிசீலித்து வருகிறோம்’ என்று பேட்டியளித்துள்ளார்.

இன்று முதல் சேவையை தொடங்கிய வண்ணாரப்பேட்டை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ கட்டணம் ரூ.40 -ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது . ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள ரயில் நிலையங்களுக்கு கட்டணத்தில் மாற்றம் ஏதும் இல்லை.
First published: February 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...