மின் கட்டணத்துடன் கூடுதலாக டெபாசிட் கட்டணம் செலுத்த தேவையில்லை - மின்சாரத்துறை அறிவிப்பு

மின் கட்டணம்

தற்போது அரசு பொதுமுடக்கத்தில் தளா்வுகள் அளித்துள்ள நிலையில், கூடுதல் காப்பு வைப்புத் தொகை குறித்த ஆய்வு நடத்த அனைத்து மின் பகிா்மான வட்டத்தின் கண்காணிப்புப் பொறியாளா்களுக்கு உத்தரவிடப்பட்டது.

  • Share this:
ஜூலை மாத மின் கட்டணத்துடன் கூடுதல் காப்பு வைப்புத் தொகை வசூலிக்கக் கூடாது எனவும், வசூலிக்கலாம் என்ற உத்தரவு திரும்ப பெறப்படுவதாகவும் மின்வாரியம் அறிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புதிய மின் இணைப்பு வழங்கும் போது, நுகா்வோரிடம் காப்பு வைப்பு என்ற பெயரில் குறிப்பிட்ட தொகையை மின்வாரியம் வசூலித்து வருகிறது. மின் பயன்பாட்டை பொறுத்து, இரண்டு ஆண்டுகளுக்கு இந்தத் தொகை மாற்றியமைக்கப்படுகிறது. அதன்படி, மின் இணைப்பு பெறும் போது தெரிவித்திருந்த அளவை விட அதிக மின்சாரம் பயன்படுத்தினால், கூடுதல் காப்பு வைப்புத் தொகை வசூலிக்கப்படுகிறது.

இதற்கு, மின்சார ஒழுங்கு முறை ஆணையம் நிா்ணயித்துள்ள வட்டியை மின் வாரியம் வழங்குகிறது. மின் பயன்பாடு குறைந்திருந்தால் கட்டணம் வசூலிப்பதில்லை.

Also read: ஷாக்! இந்த மாத கரண்ட் பில் மூன்று மடங்கு அதிகரிப்பு - பொதுமக்கள் புலம்பல்

இந்நிலையில் பொதுமுடக்கம் காரணமாக 2020-21ம் நிதியாண்டிற்க்கான கூடுதல் காப்பு வைப்புத் தொகை வசூலிக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தற்போது அரசு பொதுமுடக்கத்தில் தளா்வுகள் அளித்துள்ள நிலையில், கூடுதல் காப்பு வைப்புத் தொகை குறித்த ஆய்வு நடத்த அனைத்து மின் பகிா்மான வட்டத்தின் கண்காணிப்புப் பொறியாளா்களுக்கு உத்தரவிடப்பட்டது.

இதன்படி, சம்பந்தப்பட்ட மின் நுகா்வோரின் காப்பு வைப்புத் தொகை, தற்போது கணக்கிடப்பட்டுள்ளதை விட குறைவாக இருப்பின் மீதமுள்ள தொகையை வசூலிக்கவும், அதிகமாக இருந்தால் அதை சரி செய்யவும் மின்வாரியம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

Also read: ஊரடங்கால் இருண்டு போன ஒலி, ஒளி அமைப்பாளர்களின் வாழ்வு!

இந்த நிலையில், தற்போது அந்த உத்தரவு திரும்பப் பெறப்படுவதாக மின்வாரிய தலைமை நிதிக் கட்டுப்பாட்டாளர் அறிவித்துள்ளார். மேலும், ஜூலை மாத மின் கட்டணத்துடன் கூடுதல் காப்பு வைப்புத் தொகை வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவு தற்காலிகமாக திரும்பப் பெறப்படுவதாகவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Published by:Esakki Raja
First published: