பெண்களுக்கு நிதியுதவு அளிக்கும் திட்டம் தொடர்பாக அறிவிப்பு வெளியிட்ட நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குடும்ப தலைவரின் பெயரை மாற்ற தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு மாதம் ரூ.1000 ரூபாய் வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. தேர்தலில் வெற்றி பெற்று திமுக அரசு அமைந்ததையடுத்து இந்த திட்டம் எப்போது தொடங்கப்படும் என பெண்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதேவேளையில், குடும்ப தலைவராக இருந்தால் மட்டுமே பெண்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை வழங்கப்படும் என வதந்தி பரவியது. இதையடுத்து ஏராளமான பெண்கள் குடும்ப தலைவரின் பெயரில் இருந்து தங்களது கணவர் பெயரை நீக்கிவிட்டு தங்கள் பெயரை சேர்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கோடம்பாக்கம்- பூந்தமல்லி மெட்ரோ சேவை: பட்ஜெட்டில் முக்கிய தகவல்!
இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரில் இது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்ட நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், குடும்பத்தின் தலைவர் பெண்ணாக இருந்தால் மட்டுமே மாதந்தோறும் உதவி கிடைக்கும் என சில தரப்பில் தவராக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. இதனால், பல குடும்ப அட்டைகளில் பெண் குடும்ப உறுப்பினர் ஒருவரை குடும்பத்தின் தலைவராக மாற்றுவதற்கு முயற்சித்து வருகின்றனர். இல்லத்தரசிகளுக்கு நிதியுதவி வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கம். எனவே, குடும்ப தலைவரின் பெயரை மாற்றத் தேவையில்லை’ என்று தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.