ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஜெயக்குமார் சவாலை ஏற்பது மரியாதை குறைவு - டிடிவி தினகரன்

ஜெயக்குமார் சவாலை ஏற்பது மரியாதை குறைவு - டிடிவி தினகரன்

டிடிவி. தினகரன், அமமுக பொதுச் செயலாளர்.

டிடிவி. தினகரன், அமமுக பொதுச் செயலாளர்.

 • News18
 • 2 minute read
 • Last Updated :

  அமைச்சர் ஜெயக்குமாரின் சவால் குறித்த கேள்விக்கு, “ஏற்கனவே தோல்வி அடைந்தவர்களுக்கு சவால் விடுத்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை” என டிடிவி தினகரன் பதில் அளித்துள்ளார்.

  அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் சென்னை அசோக் நகரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

  பின்னர் செய்தியாளர்களின் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேட்டியளித்த  டிடிவி தினகரன் கூறியதாவது:-

  கருணாஸ் உடன் சேர்த்து 23 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளோம். அதில் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காழ்ப்புணர்ச்சி கொண்ட அரசு அந்த தொகுதி மக்களை வஞ்சிக்கும் விதமாக அடிப்படை வசதிகளை கூட செய்து தரவில்லை.

  தொகுதி மக்களை வஞ்சிக்கும் இந்த ஆட்சியை கண்டித்து 23 தொகுதிகளிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கான தேதி இன்று முடிவு செய்தோம். சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் தகுதி நீக்கம் செல்லாது என எங்களுக்கு ஆதரவாக தான் தீர்ப்பு வரும்.

  மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார்

  மதசார்பற்ற கட்சியினர் எங்களுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற மனநிலையில் உள்ளனர். அதற்காக தொடர்ந்து எங்களிடம் பேசி வருகின்றனர்.

  ஏற்கனவே தோல்வி அடைந்த விடுத்தவரிடம் சவால் விடுத்து எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.  அமைச்சர் ஜெயக்குமார் சவாலை ஏற்றுக்கொள்வது எனக்கு மரியாதை குறைவான ஒன்று.

  அதிமுகவையும், இரட்டை இலையையும் மீட்டு எடுப்பதுதான் எங்கள் நோக்கம், 90% தொண்டர்கள் எங்களுடன் உள்ளனர்.

  முதல்வர் மற்றும் துணை முதல்வர் (கோப்புப் படம்)

  தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது ஜெயலலிதா தடை செய்த திட்டங்களை கொண்டு வந்து கொண்டிருக்கின்றனர். நாடளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வந்தால் இவர்கள் டெபாசிட் இழப்பார்கள்.

  எனக்கு முதல்வர் ஆக வேண்டும் என்ற எண்ணம் இல்லை எங்கள் அணியில் இருப்பவர்களில் ஒருவர் ஆக வேண்டும் என்பதே எண்ணம்.

  சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு முறைப்படி நீதிமன்றத்தை அணுகி மறுசீராய்வு மனு போட்டு ஏற்கனவே இருந்த நிலையை திரும்ப பெற்று வர முயற்சி செய்வதுதான் மக்களுக்கு நன்மையாக அமையும்.

  இவ்வாறு டிடிவி தினகரன் பதில் அளித்தார்.

  தொடர்புடைய செய்திகள்..

  அதிமுகவுக்கு தொண்டர்கள் மட்டுமே வாரிசு - முதல்வர் பழனிசாமி பேச்சு

  மேலும் செய்திகள்..

  Published by:Sankar
  First published:

  Tags: ADMK, AMMK, Minister Jayakumar, TTV Dhinakaran